பெரிய திருமொழி – 6

0
668 views
Periyathirumozhi 1.1.5

பெரிய திருமொழி முதற்பத்து முதல் திருமொழி

Thanjai Maamanikoil vimanam
Periyathirumozhi 1.1.5

நம்பிகாள்

பகவத் குணாநுபவத்தால் நிறைந்திருக்கின்ற பாகவதர்களே!,

எம்பிரான்

எமக்கு உபகாரகனும்

எந்தை

எமக்குத் தந்தையும்

என்னுடைய சுற்றம்

எனக்கு ஸகலவித பந்துவும்

எனக்கு அரசு

என்னை ஆண்டவனும்

என்னுடைய வாழ்நாள்

என்னுடைய ப்ராண பூதனும்

அரக்கர் வெருக்கொள அம்பினால்

ராக்ஷஸர் அஞ்சும்படியாக அம்புகளினால்

நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்

தகர்த்து அவர்களது உயிரைமுடித்த அஸ்மத்ஸ்வாமியுமான ஸர்வேச்ரனுடைய

வம்பு உலாம் சோலை

பரிமளம் வீசுகின்ற சோலைகளையும்

மாமதிள்

பெரிய மதிள்களையும் உடைத்தான

தஞ்சை மா மணிக்கோயிலே வணங்கி

தஞ்சைமாமணிக் கோயிலையே ஸேவித்து

நான் உய்ய

(உங்களைப் போலே) நானும் உஜ்ஜீவிக்கும் படியாக

நாராயணா என்னும் நாமம் கண்டு கொண்டேன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

திருமந்த்ரத்தின் அர்த்தத்தை ஒருபடி அநுஸந்திப்பதாயிருக்கும் இப்பாட்டு [மாதா பிதா ப்ராத நிவாஸச் சரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண:] என்று ஸுபாலோபநிஷத்திலே சொன்ன அர்த்தத்தை அநுஸந்திக்கிறார். எனக்கு பல உபகாரங்கள் பண்ணினவனும், எனக்குத் தந்தையும், எனக்கு எல்லா உறவு முறையும், விரோதிகளைப் போக்கி என்னை ஆண்டவனும், என்னை ஜீவித ஸர்வஸ்வமும், சங்கல்பத்தாலல்லாமல் ஸரமாரிபொழிந்து ராக்ஷஸ வர்க்கங்களை கிழங்கெடுத்தவனுமான ஸர்வஸ்வாமி எழுந்தருளியிருக்கிற பரமபோக்யமான தஞ்சைமாமணிக்கோயிலைத் தொழுது “ஸர்வவித பந்துவும் அவனே” என்கிற அர்த்தத்துக்கு வாசகமான திருநாமத்தைக் காணப்பெற்றேன் என்றாராயிற்று.

English Translation

My Lord, my Father, my kith and kin, my Liege, my remaining days, O! you shot an arrow, on Rakshasas-clan, and rid the world of a burden! I offered worship, in Tanjai Mamani, temple with walls and flowers groves. O Friends, believe me, — I found the Mantra, Narayana is the good name.

Source:

http://dravidaveda.org/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here