பெரிய திருமொழி – 5

1
1,509 views

பெரிய திருமொழி முதற்பத்து முதல் திருமொழி

Periyathirumozhi 1.1.5
கள்வனேன் ஆனேன் (கீழ்க்கழிந்த காலமெல்லாம்) ஆத்மாபஹாரக் கள்வனாகி
படிறு செய்து இருப்பேன் பலபல தீமைகளைச் செய்பவனாகி
கண்ட ஆ திரிதந்தேனேலும் (இப்படி) மனம்போன படியே திரிந்துழன்றேனாயினும் (இன்று)
தெள்ளியேன் ஆனேன் தெளிவு பெற்றவனானேன்:
திருஅருள்சிக்கன பெற்றேன் பகவத் கிருபையைத் திண்ணிதாக லபிக்கப் பெற்றேன்;
செல் கதிக்கு அமைந்தேன் போகவேண்டிய நல்வழிக்கு ஆளானேன்;
உள்எலாம் உருகி ஹ்ருதய மடங்கலும் நீர்ப்பண்டமாகிக்
குரல் தழுத்தொழிந்தேன் குரல் தழுதழுக்கப்பெற்று
கண்ண நீர் உடம்பு எலாம் சோர ஆநந்த பாஷ்பமானது சரீரம் நிறையப்பெருகப்பெற்று
நள் இருள் அளவும் பகல் அளவும் அஹோராத்ர விபாகமின்றி ஸர்வகாலத்திலும்
நாராயணா என்னும் நாமம் நான் அழைப்பன் நாராயணா நாமத்தைச்சொல்லி நான் கதறா நிற்பன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

உலகில் திருடப்படும் பொருளின் தாரதம்யத்திர்க்கு ஏற்பவும் பொருளுடயவனது யோக்யதையின் தாரதம்யத்திர்க்கு ஏற்பவும் பாபத்திலும் தாரதம்யம் உண்டு; விறகு திருடினவனுடைய பாபத்திற்காட்டில் ரத்னம் திருடினவனுடைய பாபம் பெரிது; சூத்ரனுடுடைய பொருளை திருடின பாபத்திற்காட்டில் பிராமணனுடைய பொருளை திருடின பாபம் பெரிது. நான் திருடிய பொருளும் சிறந்தது, அப்பொருளுடையவனும் ஸர்வோத்தமன்; சிறந்த ரத்னத்திலும் மேற்பட்டதான ஆத்மா வஸ்துவை அபகரித்தேன்; அந்த வஸ்துவோ ஸர்வோத்தமனான எம்பெருமானுடயது. ஆகையாலே ‘இதற்கு மேற்பட்ட பாபமில்லை’ என்னலாம்படியான கொடிய பாபத்திற்கு கொள்கலமான கலவை செய்தவனாயினேன்.

விதிநிஷேத சாஸ்த்ரங்களுக்கு சிறிதும் கட்டுப்படாமல் ‘மனமே அரசன், மதியே மந்திரி’ என்று இப்படி நான் அநாதி காலமாக ஆத்மாபஹாரம் முதலிய கொடிய பாவங்களைச் செய்து போந்தேனாகிலும் இன்று பகவத் கிருபையை திண்ணிதாகப் பெற்று நல்லது கெட்டதுகளை ஆரைந்துணரக் கூடிய விவேகஞானம் பெற்று “இனி இவன் சம்சாரத்துக்கு ஆளாகமாட்டான், பரமபதத்துக்கு ஆளாகுமத்தனை” என்று ஞானிகள் நிச்சயிக்கும்படியாகச் சிறந்த நிலைமைக்கு வந்துவிட்டேன். இப்போது நானிருக்கிரபடியைப் பாருங்கள்; ஸ்ரீமந்நாராயண நாமத்தை அநுசந்திக்கவேணுமென்று நினைக்கும் போதே எனது ஹ்ருதயம் நீர்ப்பண்டமாக உருகுகின்றது; அத்திருநாமத்தை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கினால் குரல் தழதழத்துப்போகிறது; ஆநந்தக் கண்ணீர் உடம்பெங்கும் முத்துமாலையிட்டார்போலே பெருகுகின்றது. இப்படியிருந்துகொண்டு அஹோராத்ரமும் நான் நாராயண நாமந் தன்னையே கதறுபவனாயினேன் என்றாராயிற்று.

English Translation

I was a tyrant, my ways were murky, I went about as I wished to. Yet I became clear, ready to be led, into a new life through God’s grace. I melted inside, my voice became soft, I was covered in my tears. All through the night and day I keep chanting, Narayana is the good name.

Source:
http://dravidaveda.org/

Print Friendly, PDF & Email

1 COMMENT

  1. THIRUKKANNAMANGAI IS ONE OF THIRUMANGAI AZHWAR’S FAVOURITE DIVYADESAM AS EVIDENCED BY 7TH THIRUMOZHI 10TH PATHU. WHEREAS THIRUNARAIYUR SRINIVASAPERUMAL WAS HIS ACHARYAN, THIRUKKANNAMANGAI PERUMPURAKKADAL WAS INVITED TO BE HIS(THIRUMANGAI AZHWAR’S) SHISHYAN.

    HENCE THERE IS NO WONDER THE PERUMPURAKKADAL MANIFESTS HIMSELF AS “BHAKTHAR AAVI” PERUMAL ONE WHO STAYS ABOVE THE HEAD OF HIS DEVOTEES AND SAVE THEM (NACHUVAAR UCHI MEL NIRKUM NAMBI)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here