Sri Varadhraja PerumalSri Perundhevi Thayar Navarathri Uthsavam day7 & Kethandipatti Swamy thiru Nakshathram

2
1,226 views

Navarathari Utsavam is being grandly celebrated for Sri Varadhraja Perumal-Sri Perundhevi Thayar in Kanchi. Some of the Photos taken during day-7 of the utsavam can be viewed below.

Sri Kethandipatti Swamy thirunakshathram was also celebrated on the same day.

Here is a write up about Sri HH Kethandapatti Swami

ஸ்ரீநல்லான் என்கிற ஸ்வாமியினிடம் ஸ்ரீகீதாபாஷ்யம் காலக்ஷேபம். அப்பொழுது ஆசார்யனுடைய ஸ்வப்னத்தில் எம்பெருமான் நியமித்ததாவது :— ஸ்ரீ பரமபரி வழுத்தூர் வேதாந்த ராமாநுஜ ஸ்வாமியின் ப்ரதான சிஷ்யரான பரமபரி ஆண்டிக்காட்டு ஸ்வாமி மூலமாக ஸத்ஸம்பிரதாயம் செழிக்க வேண்டுமென்று தாம் ஸங்கல்பித்திருப்பதால் இந்த சக்ரவர்த்தி மூலம் ஸம்ப்ரதாய வ்ருத்தி விசேஷமாக வேண்டியிருப்பதால் அவரிடம் இவர் போம்படி நியமிக்கவேணும் என்று. இதைக் கண்டவுடன் ஆச்சர்யப்பட்டு சிஷ்யனை அழைத்து ஸ்ரீநல்லான் ஸ்வாமி நியமிக்க அந்த நியமனத்திற்காக ஸ்வாமி ஸ்ரீரங்கம் எழுந்தருள ஸ்ரீ ஆண்டிக்காட்டு ஸ்வாமியும் பகவன் நியமனமென்று ஸர்வவேதாந்தார்த்தங்களையும் மிக்க வாத்ஸல்யத்துடன் அருள, அதனால் அற்புத க்ஞான சக்திகளைப் பெற்று, வேதாந்த ப்ரவசநம் செய்தருளினபடி. ஒரு ப்ரம்ஹ ரக்ஷஸ்ஸு ஸ்ரீஸ்வாமியின் அனுக்ரஹம் பெற்று மோக்ஷமடைந்தது. அப்போது ஏற்பட்ட பாதுகை இன்னும் ஓரிடத்தில் இருக்கின்றது.

     இவர் அருளிய க்ரந்தங்கள்:–
     (1) அதிகரண ஸங்கதி மாலை (2) ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரஸங்க்ரஹம், திவ்யப்ரபந்த உரையின் ஸங்க்ரஹம் என்றாற் போன்ற க்ரந்தங்கள் பல. பெருமாள் கோவிலில் திருப்புட்குழி ஸ்வாமி என்ற சதுச்சாஸ்த்ர கல்பதருவின் திருமடியில் சாய்ந்து திருநாட்டுக்கெழுந்தருளியபடி. உபநிஷத் பாஷ்யகாரரின் உயர்ந்த அவதாரம்.
     இவ்வாசார்ய ஸார்வபௌமன் பூர்வாச்ரமத்தில் லக்ஷ்மீபுரத்தைச் சேர்ந்தவர். விபவ ஐப்பசி மூல நக்ஷத்திரத்தில் திருமலை நல்லான் சக்ரவர்த்தி திருவம்சத்தில் கேதாண்ட பட்டியில் ஸ்ரீநிவாஸ சக்ரவர்த்தியாசார்யருக்கு திருக்குமாரராய் அவதரித்து க்ரஹஸ் தாச்ரமத்திலேயே கூரத்தாழ்வானைப்போல் பரமவிரக்தராய் தமக்கிருந்த அமோக மான  ஐச்வர்யம் யாவற்றையும் தமையனாருக்கு கொடுத்துவிட்டு தாம் உஞ்சவிருத்தி செய்துகொண்டு அஷ்டாக்ஷராதி மந்திரஜபபரராய் எழுந்தருளியிருந்து, வங்கீபுரம் ஸ்வாமி ஸந்நிதியில் ஸகலார்த்தங்களையும் க்ரஹித்து ஜ்ஞாநவைராக் யாநுஷ்டாநசே வதியாய் எழுந்தருளி இருக்கும்போது, திருக்குடந்தை ஆராவமுதனை ஒரு நாள் மங்களாசாஸனம் செய்ய எழுந்தருளி ஸ்ரீஸூக்திகளை அநுஸந்தித்துக்கொண்டு ஆபீடாந்மௌளிபர்யந்தம் மங்களாசாஸனம் செய்துகொண்டு பகவதநுபவம் பண்ணும் ஸமயம் நாவல்பாக்கம் அண்ணயார்யதாததேசிகனும் மங்களாசாஸனம் செய்ய அவ்விடத்திற்கு எழுந்தருள இரண்டு திருநாமங்களும் சேர்ந்து எம்பெருமானை அஸபவித்து, அநுபவபரிவாஹமாய் பகவத் குணங்களை பரிமாறிக்கொண்டு இருக்கும்போது மூலமாய் திருவஹீந்திரபுரத்தில் மலைமேல் எழுந்தருளி இருக்கும் ஹயக்ரீவனுக்கு ஸந்நிதி கைங்கர்யம், பெருமாள் கோவிலில் தூப்புல் தேசிகன் ஸந்நிதி முதலான அநேக கைங்கர்யங்களை செய்வித்து ஜகத்ப்ரஸித்தராய் எழுந்தருளி இருந்தார்.
தனியன்
ஸ்ரீரங்கலக்ஷ்மணமுநி ஸ்வக்ருத ப்ரபந்த
கூடார்த்த போதனக்ருதே ஸமபூத் க்ருதாத்மா
வேதாந்த லக்ஷ்மண முநீந்த்ர பதாப்ஜப்ருங்கம்
ஸ்ரீரங்கலக்ஷ்மண முநீம் தமஹம் ப்ரபத்யே
Tamil Writeup – Thanks to : Sri Navalpakkam Aravamudhachar
Photos Thanks to: Sri Elangadu Ranganatha Chakravarthy
 

 

 

 

Print Friendly, PDF & Email

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here