அமரர் முழுமுதலாகிய ஆதியை

0
613 views

அமரர் முழுமுத லாகிய ஆதியை,
அமரர்க் கமுதீந்த ஆயர் கொழுந்தை,
அமர அழும்பத் துழாவியென் னாவி,
அமரர்த் தழுவிற் றினிய கலுமோ.

Meaning:

The Lord who gave ambrosia to the gods, is the darling-child of the cowherd clan. My souls has blended my being into him. How can the thought of separation arise again?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

“என்னுடைய நன்னெஞ்சந்தன்னை யகல்விக்கத் தானுங்கில்லான்” என்று சொல்லவேண்டிய ப்ரஸக்திதானுமில்லையே; ‘எனது நெஞ்சும் அவனுஞ்சேர்ந்து ஒரு திரவியம் என்னலாம்படி ஒற்றுமைபெற்றுள்ள விதனைப் பிரிக்கும்வகைதான் உண்டோவென்கிறார்.

நித்யஸூரிகளினுடைய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்திகளெல்லாம் தன்னுடைய ஆதீனமாம்படியிருப்பவனும், நம்போலியரைக் கரணகளேபரங்கள் கொடுத்துப் படைத்தவனும் ‘எங்களுக்கு நீ வேண்டா; உப்புச்சாறு போதும்’ என்ற தேவர்கட்கும் கடல் கடைந்து அமுதமளித்தவனும், அந்த அம்ருதம் வேண்டா, நீயே வேணும் என்ற ஆயர்களுக்காக வந்து அவதரித்துத் தன்னைக் கொடுத்தவனுமான எம்பெருமானை என்னுடைய ஆத்மாவானது கிட்டிச் செறிந்து அனுபவித்து ஏகத்ரவ்யமென்னலாம்படி கலந்துவிட்டது; இரண்டு வஸ்துவாக இருந்தாலன்றோ பிரிக்கலாவது; இனி பிரிக்க விரகில்லை யென்றாராயிற்று…

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here