பெரிய திருமொழி – 8

0
1,320 views
Periyathirumozhi 1.1.8

பெரிய திருமொழி முதற்பத்து முதல் திருமொழி

Periyathirumozhi 1.1.8

கலைகள்

சாஸ்த்ரங்களை

கற்றிலேன்

கற்றறிந்தவனல்லேன்;

ஐம்புலன் கருதும் கருத்துள்

பஞ்சேந்திரியங்கள் விரும்புகின்ற விஷயங்களிலே

மனதைத் திருத்தினேன்

நெஞ்சைச் செலுத்திக் கிடந்தேன்;

அதனால்

இப்படியிருந்ததனாலே

பேதையேன்

அவிவேகியான நான்

நன்மை பெற்றிலேன்

ஒரு நன்மையும் பெறாதவனாயினேன்;

பெரு நிலத்து ஆர்

பெரிய இப்பூமியிலேயுள்ள

உயிர்க்கு எல்லாம்

பிராணிகளுக்கு எல்லாம்

செற்றமே வேண்டி

தீங்கு செய்வதையே புருஷார்த்தமாகக்கொண்டு

திரிதருவேன்

(அதுவே போதுபோக்காகத்)திரிந்து கொண்டிருந்தேன்,

(இப்படி நெடுங்காலம் கெட்டுப் போனேனாகிலும், இன்று பகவத் கடாக்ஷத்தாலே)-

தவிர்ந்தேன்

இக்கொடுமைகளெல்லாம் தவிரப்பெற்றேன்;

அடியேன்

தாஸனாகப் பெற்ற நான்

செல்கதிக்கு உய்யும் ஆறு எண்ணி

செல்ல வேண்டிய நல்வழியை நண்ணி உஜ்ஜீவிக்கும்படியைச் சிந்தித்து

நாராயணா என்னும் நாமம்

நாராயணா நாமத்தை

நல் துணை ஆக பற்றினேன்

நல்ல ஸஹாயமாகக் கைக்கொண்டேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

ஓர் ஆசிரியன் திருவடிகளிலே சென்று பணிந்து குணிந்து கேட்டவனல்லேனாகயாலே ஒரு சாஸ்த்திர ஞானமும் எனக்கில்லை; நெஞ்சை ஒரு நொடிபொழுதாகிலும் நல்விஷயத்திலே செளுத்தினவனல்லேன் செவி வாய் கண் மூக்கு உடலேன்னுமைம்புலன்ன்கள் விரும்புகின்ற சப்தாதி விஷயங்களிலே நெஞ்சைச் செலுத்திப் போந்தவனாதலால் அறிவுக் கேடனாய் ஹிதசிந்தை பண்ணப்பெற்றிலேன்; எனக்கொரு நன்மை சம்பாதியாதவளவேயன்றி உலகத்திலுள்ள பிராணிகளையெல்லாம் எல்லாம் ஹிம்சித்து நான் வயிறு வளர்க்கும் வழியையே நோக்கினேன். இப்படி நான் இருந்தது நேற்று வரையில்; இன்று இந்நிலைமைகள் எல்லாம் தவிர்ந்து நல்வீடு சேர்ந்து உஜ்ஜீவிக்க வேண்டிய வழியை சிந்தித்து, இக்கரையில் நின்றும் அக்கரையிலே கொண்டு தள்ள வல்லதொரு திருநாமத்தைத் துணையாகப் பற்றினேன்.

English Translation

I had no schooling, I let my senses rule and to lead my heart everywhere. I lost a good life, O File-to-me wretch; I roamed like death on all creatures. I put an end to my roaming everywhere seeking a life of redemption. I found the perfect Mantra for comfort, Narayana is the good name!

Source:

http://dravidaveda.org/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here