பெரிய திருமொழி – 4

0
999 views
Periyathirumozhi 1.1.

பெரிய திருமொழி முதற்பத்து முதல் திருமொழி

Periyathirumozhi 1.1.4
வென்றியே வேண்டி வெற்றியையே விரும்பியும்
வீழ் பொருட்கு இரங்கி நச்வரமான பொருள்களைப் பற்றிக் கரைந்தும்
வேல் கணார் கல்வியே கருதி வேல் போன்ற கண்களையுடைய மாதர்களின் கலவியை ஆசைப்பட்டும்

(ஆக இப்படிகளாலே)

நின்ற ஆ நில்லா நெஞ்சினை உடையேன் நின்றபடி நில்லாத [சஞ்சலமான] நெஞ்சை யுடையேனான நான்
என் செய்கேன் என்ன பண்ணுவேன்?
அன்று முன்னொரு காலத்து
நெடு விசும்புஅணவும் பன்றி ஆய் நெடிய ஆகாசத்தை அளாவி வளர்ந்த மஹா வராஹஸ்வரூபியாய்
பாரகம் கீண்ட பூ மண்டலத்தை உத்தரித்த
பாழியான் மிடுக்கையு டையனாய்
ஆழியான் ஸ்ரீ ஸுதர்சந பாணியான ஸர்வேச்வரனுடைய
அருளே க்ருபையினாலே
நான் நன்று உய்ய நான் செவ்வையாக உஜ்ஜீவிக்கும்படி

நாராயணா என்னும் நாமம் நான் கண்டு கொண்டேன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

நாம் எல்லார்க்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டியதுபோய் ‘எல்லாரிலும் நாம் மேற்பட்டிருக்க வேண்டும்; நாமே வெற்றிபெற்று எல்லாரும் நமக்குத் தோற்றிருக்க வேண்டும்’ என்று ஆசைப்பட்டுக் கிடந்தேன்; கையிலிருந்து ஒரு காசு நழுவிப் போனாலும் ஸர்வஸமும் இழந்தார் போல் அநுதபித்துக் கிடந்தேன்; மாதர்களோடு புணர்ந்து வாழ்வதற்கு மேற்பட வாழ்ச்சியே இல்லையென்று துணிந்து கிடந்தேன்; ஒன்றிலும் நிலைத்து நிற்கமாட்டாமல் கண்டவிடங்களிலும் சபலமாய்த் திரியும் நெஞ்சையுடையேனான நான் என் செய்வது! எப்படி உஜ்ஜீவிப்பது!! என்று தடுமாறிக் கிடந்தளவிலே எம்பெருமானுடைய நிர்ஹேதுக கிருபையாலே இன்று நன்றாக உஜ்ஜீவிக்க வழி ஏற்பட்டது என்றாராயிற்று.

English Translation

Looking for success, stooping to low ways, I sought to sex with lurid ones. My heart went roaming, –no one could stop me, –and alas; O what can I do now? The Lord of discus, who took a boar-foam, — his grace in store is a might-full. Well did he save me, — I know the Mantra, — Narayana is the good name.

Source:
http://dravidaveda.org/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here