பெரிய திருமொழி -1

0
1,226 views

பெரிய திருமொழி முதற்பத்து முதல் திருமொழி

வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம். – 1.1.1

வாடினேன் கீழ்க்கழிந்த காலமெல்லாம் வாடிக்கிடந்தேன்;
வாடி அப்படி வாடியிருந்ததனால்
மனத்தால் வருந்தினேன் மனவருத்தமடைந்தேன்;
பெரு துயர் இடும்பையில் அளவற்ற துக்கங்களுக்கு இருப்பிடமான ஸம்ஸாரத்திலே
பிறந்து கூடினேன் பிறந்து (அந்த ஸம்ஸாரத்திலேயே) பொருந்தப்பெற்றேன்;
கூடி அப்படி ஸம்ஸாரியாய்க் கிடந்ததனால்
இளையவர் தரும் கலவியே கருதி இளமை தங்கிய பெண்கள் தரக்கூடிய சிற்றின்பத்தை ஆசைப்பட்டு
அவர் தம்மோடு ஓடினே அந்தப்பெண்கள் போன வழியையே பற்றி ஓடினேன்;
ஓடி இப்படி ஓடித்திரியுமிடத்து;
உய்வது ஓர் பொருளால் ஆத்மோஜ்ஜீவநத்துக்கு உறுப்பான எம்பெருமான் திருவருளாலே
உணர்வு எனும் பெரு பதம் திரிந்து ஞானமென்கிற ஒரு சிறந்த ஸ்தானத்தில் அடிவைத்து
நாடினேன் நன்மை தீமைகளை ஆராயப் புகுந்தேன்;
நாடி அப்படி ஆராயுமளவில்
நாராயணா என்னும் நாமம் நான் கண்டு கொண்டேன் திருவஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தை நான் லபிக்கப்பெற்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

அநாதிகாலம் விஷயப்ரவணராய் எம்பெருமானை மறந்திருந்த இவ்வாழ்வார் நிர்ஹேதுகமான பகவத்கிருபையால் திருவஷ்டாக்ஷர மஹாமந்த்ரத்தை பெற்று ஸ்வரூபமுணர்ந்து திருந்தினராதலால், அந்த மஹாமந்த்ரத்தின் (உள்ளீடான ஸ்ரீநாராயண நாமத்தின்) சிறப்பை விரித்துரைத்துக்கொண்டு, தாம் நெடுங்காலமாக பகவத் விஷயத்தை மறந்து அநர்த்தப்பட்ட படியையும் இப்போது உஜ்ஜீவிக்கப் பெற்ற படியையும் பலருமறியப் பேசுகிறார்.

English Translation

I wilted, wilting despaired in my heart, born in the pain of a dark womb. I mingled, mingling with lurid young dames, seeking the sensual pleasures they did give me. I ran, and running by grace of Good-Lord, probed into nature of my mind. I sought, and seeking, found out for myself, Narayana is the good name.

Source:
http://dravidaveda.org/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here