Narasingapuram Sri Lakshmi Narasimha Swamy Temple Aani Brahmotsavam Commences

0
1,947 views

Narasingapuram Brahmotsavam Dwajarohanam

Today, June 20, 2014; Jaya Varusha Aani Uthirattadhi, Aani Brahmotsavam commenced at Sri Lakshmi Narasimha Swamy Temple, Narasingapuram with Dwajarohanam, Chapparam purappadu and Thirumanajanam in the morning. Last evening, Senai Mudalvar purappadu took place. The utsavam is scheduled to take place until June 29, 2014.

The following are some of the photographs taken earlier today and last evening followed by the official pathrigai for the utsavam…

 Dwajarohanam

 Narasingapuram Brahmotsavam Dwajarohanam1 Narasingapuram Brahmotsavam Dwajarohanam2 Narasingapuram Brahmotsavam Dwajarohanam3 Narasingapuram Brahmotsavam Dwajarohanam4 Narasingapuram Brahmotsavam Dwajarohanam5Narasingapuram Brahmotsavam Dwajarohanam

Chapparam Purappadu and Thirumanjanam

Narasingapuram Brahmotsavam Chapparam Narasingapuram Brahmotsavam Chapparam1 Narasingapuram Brahmotsavam Chapparam2

  Narasingapuram Brahmotsavam Thirumanjanam Narasingapuram Brahmotsavam Thirumanjanam1 Narasingapuram Brahmotsavam Thirumanjanam2

Senai Mudalvar Purappadu

Narasingapuram Brahmotsavam Senai Mudalvar Narasingapuram Brahmotsavam Senai Mudalvar1 Narasingapuram Brahmotsavam Senai Mudalvar2 Narasingapuram Brahmotsavam Senai Mudalvar3 Narasingapuram Brahmotsavam Senai Mudalvar4 Narasingapuram Brahmotsavam Senai Mudalvar5 Narasingapuram Brahmotsavam Senai Mudalvar6

  Narasingapuram Brahmotsavam invite11 Narasingapuram Brahmotsavam invite12Narasingapuram Brahmotsavam invite2Photography by Sri Rajesh Muthu Samy

About The Temple

Sri Lakshmi Narasimha temple at Narasingapuram is located about 55kms from Chennai off the Chennai-Bangalore highway near Sriperumbudur.

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி திருக்கோவில் நரசிங்கபுரம்

சென்னைக்கு அருகே உள்ள பழமையான வைணவ ஸ்தலங்களில் நரசிங்கபுரமும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று.

””நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில் ”’

என்பது இத்தலத்திற்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது.

1.மூலவர் : ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்
2.உற்சவர் : ஸ்ரீ பிரஹலாத வரதர்
3.தாயார் : ஸ்ரீ மரகதவல்லி தாயார்
4.தல விருட்சம் : வடகலை, பாஞ்சரார்த்தம்
5.தீர்த்தம் : ஆகமம்/பூஜை
6.பழமை : சுமார் 1500 ஆண்டு பழமை வாய்ந்த திருக்கோவில்
7.புராண பெயர் : நரச நாயகர் புரம்
8.ஊர் : நரசிங்கபுரம்
9.மாவட்டம் : திருவள்ளூர்
10.மாநிலம் : தமிழ்நாடு

தல சிறப்பு:

மூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டி இருப்பது சிறப்பு.

வரலாறு:

இந்த க்ஷேத்ரம் 16வது நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூலவர் ஏழரை அடி உயரத்தில் மகாலக்ஷ்மியை இடது துடை மீதமர்த்தி சாந்த ஸ்வரூபியாக அருள் பாலிக்கிறார்.

மகாவிஷ்ணுவின், பத்து அவதாரங்களில் உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்களில் தீயவர்களை அழிக்கும் இடம், நேரம் போன்றவை அந்தந்த அவதாரத்திலிருந்த பெருமாள் எடுத்த முடிவு. ஆனால் நரசிம்ம அவதாரம் மட்டும், பிரகலாதன், எப்போது, எந்த இடத்தில் தன்னை அழைப்பானோ என்று எண்ணி, அனைத்துலகிலும் பரவி இருந்து, கூப்பிட்டவுடன், கூப்பிட்ட இடத்தில் தோன்றி தீமையை அழிக்கக் காத்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

இவர் லட்சுமி நரசிம்மனாய் வீற்றிருந்து அருள்புரியும் தலமே திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகிலுள்ள நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். இவரிடம் வேண்டுதல் வைத்தால், நிறைவேற்ற வேண்டிய நேரத்தில் சரியாக நிறைவேற்றி விடுவார் என்கின்றனர்.
இங்கு அஷ்டலட்சுமிகளும் அருள்புரிவது விசேஷம். ….

திருக்கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை : 7.30 AM TO 12.00 AM
மாலை: 4.30 PM TO 08.00 PM
(பிற விஷேஷ காலங்களில் நேர மாற்றம் உண்டு)

போக்குவரத்து வசதி….
——சென்னையில் இருந்து பூந்தமல்லி வழியாக பெங்களூர் நெடுஞ்சாலையில், தண்டலத்தில் (MP distillaries ) இருந்து வலது புறம் திரும்பி பேரம்பாக்கம் வழியாக அரக்கோணம் செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.

——திருக்கோவிளுக்கு பூவிருந்தவல்லிருந்து (MTC) மாநகர பேருந்து தடம் எண் 591C திருக்கோவில் வரை செல்கிறது.

*591C பேருந்துகால அட்டவணை
*பூவிருந்தவல்லிருந்து புறப்படும் நேரம்
1 06:15 AM
2 08:50 AM
3 11:45 AM
4 02:40 PM
5 05:30 PM
6 08:10 PM
*நரசிங்கபுரத்தில்ருந்து புறப்படும் நேரம்
1 07:30 AM
2 10:15 AM
3 01:10 PM
4 04:10 PM
5 06:50 PM
6 09:30 PM

மேலும் விவரங்களுக்கு :

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி சேவா சபா டிரஸ்ட்
நரசிங்கபுரம் அஞ்சல் ,
பேரம்பாக்கம் வழி,
திருவள்ளூர் மாவட்டம்-631402.
மொபைல் : 9442585638

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here