
இன்று மாசி மகத்தையொட்டி காலை 8 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ” தங்க கருட” வாகனத்தில் விசேஷ அலங்காரத்துடன் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார். திருவீதி சுற்றி திருக்கோயில் வாயிலுக்கு எழுந்தருளியதும், உள்ளிருந்து ஸ்ரீ சக்ரத்தாழ்வார்(தீர்த்த பேரம்) தீர்த்த மல்லாரியுடன் “தர்ஸன புஷ்கரிணி” க்கு எழுந்தருளி புண்யாகவாசனம், ஸ்தபனம் ஆகி, ஸ்ரீ சக்ரத்தாழ்வாருக்கு எல்லா த்ரவியங்களுடன் திருமஞ்சனம் ஆகி, ” தர்ஸ புஷ்கரிணி”யில் அபவிருதம்(தீர்த்தவாரி)நடந்தது.
ஸ்ரீ சக்ரத்தாழ்வார், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் உள்ளே எழுந்தருளி, சுமார் 11மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷமான திருமஞ்சனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, தீர்த்தவாரியின் போது புஷ்கரிணியில் தீர்த்தாமாடி, ஸ்ரீ பெருமாளின் விசேஷ திருமஞ்சனத்தை தரிசித்து ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.
Writeup and Photography : Sri Rajagopalan TSR
adiyen
patharavi perumal darsanam pakiam