காஞ்சி வைசாகோத்ஸவத்தில் பாகவத ததீயாராதனை

0
933 views

During Vaisaakothsavam at Kanchi, Adithi Sath Kaaram’s Plans to conduct bagavath thatheeyaradhanam between 21st May to 31st May.

காசி முதலாய நன்னகரியெல்லாம் ஒவ்வாத புகழுடைய கார்மேனி அருளாளர் தம் கச்சியில் (காஞ்சீபுரம் பெருமாள் கோயிலில்) வரவிருக்கும் வையம் போற்றும் வைசாகோத்ஸவத்தின் போது, ஸ்ரீரங்கம் அதிதி ஸத்கார கமிட்டியினரால் மேற்கண்ட பத்து நாட்களும் பாகவத ததீயாராதனம் நடத்தத் திட்டமிட்டுள்ள படியால் பத்து நாள்கள் ததீயாராதனம் செய்வதற்கு ரூ. 4 லட்சம் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ப்ரதி தினமும் ஆயிரம் பேருக்கு அன்னம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்து நாள்கள் கைங்கர்யத்தை ஏற்று நடத்த நல் மனது படைத்த தார்மீக தனவான்கள் தனி நபராகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து முன் வந்தால் (யாரிடமும் பணம் வசூல் செய்யாமல்) பாகவத ததீயாராதனை நடத்தலாம் என “அதிதி ஸத்காரக் கமிட்டி” ஸ்ரீவரதனின் ஸங்கல்பத்தை எதிர்பார்க்கிறது.

*** சந்த்ர க்ரஹண காலத்தில் வேத பாடசாலை வித்யார்த்திகள் 108 பேருக்கு வஸ்த்ரம், தீர்த்த பாத்ரம், விசிறி, படுக்கை முதலியன தானமாக வழங்கப்படவுள்ளன.

அதிதி ஸத்காரத்தின் முக்கியக் குறிக்கோள்:-

அதிதி ஸத்காரம் செய்கிறோம் என யாரிடமும் பணம், பொருள் தாருங்கள் எனக் கேட்டுப் பெறுவதில்லை

சாப்பிட்டுவிட்டுச் செல்பவர்கள் அவர்களாகவே முன் வந்து கொடுத்தால் கூட ஏற்பதில்லை என்ற குறிக்கோளுடன் கடந்த 5 ஆண்டுகளாக ஸ்ரீரங்கத்தில் அதிதி ஸத்காரம் அரங்கனால் நடத்தப்பட்டு வருகிறது.

அரங்கன், வரதன் நியமனத்தினால் நடைபற்று வரும் அதிதி ஸத்காரத்தை ஏற்றுக்கொண்டவர்கள் மனம் உவந்து பணம் பொருள் முதலியன கொடுத்தாலும் அதை வாங்குவதில் கமிட்டிக்கு ஆர்வம் கிடையாது. ஸ்ரீரங்கத்திற்கு அரங்கனைத் தரிசிக்க வரும் யாத்ரீகர்களின் பசி தாகத்தைப் போக்க சாதி பேதமில்லாமல் அன்னதானம் (24 மணி நேரமும்) ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் காட்டியருளிய தர்மத்தை மேலும் அபிவ்ருத்தி செய்ய ஆர்வம் கொண்டுள்ளது.

100, 200 பேர்கள் அமர்ந்து சாப்பிடக்கூடிய அளவு போதுமான இடம் ஒன்றை அரங்கன் அமைத்துக் கொடுத்துவிட்டால், அனைவருக்கும் சௌகர்யமாயிருக்கும். இதை நம் அரங்கன் கூடிய சீக்ரமே நிறைவேற்றி விடுவான் என ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம். இதனை பாகவதர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் பாகவதர்களிடம் பரக்கக் கூறிவிட்டால் பகவான் அதனைத் தானே ஏற்று நடத்தி வைத்து விடுவான் என்பதே ஸ்வாமி ஸ்ரீதேசிகன் காட்டிய வழியாகும். பாகவதர்கள் என்போர் மறந்தும் புறம் தொழா மாந்தர்.

அதிதி ஸத்காரம்,
ஸ்ரீமத் ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருமாளிகை,
எண். 116, வடக்கு உத்தர வீதி,
ஸ்ரீரங்கம்.
அலைபேசி: 0-9940 294 908
Email: nikamaanthaachaaryar@gmail.com
Face Book: http://www.facebook.com/swaamidesikanthirumaaligai

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here