Epitome of Elegance – Tirukkudanthai Piratti

0
755 views

“சுவையன்”! ஆழ்வார் ஸர்வேச்வரனுக்கு சூட்டிய திருநாமங்களில் இதுவும் ஒன்று. ஆழ்வார் இந்த திருநாமம் சூட்டியதன் காரணத்தை இப்பொழுது கண்கூடாக ஸேவிக்கப்போகின்றோம்.

This video is from tirukkuDantai – pirATTi, epitome of elegance. Beautiful, mellifluous, moving music of Sangeetha Kalanidhi Smt.M.S.Subbulakshmi has been spliced.

At 1:00, “கோலமாமலர்ப்பாவை”யின் பொலிவையும், காந்தியையும், ஸௌந்தர்யத்தையும், லாவண்யத்தையும் ஸேவித்தவுடனே அவன் “சுவையன்” என்பது தன்னடையே தெள்ளத்தெளிவாகின்றது. இதை வலியுறுத்தும் வகையில் ஆழ்வாரும் “சுவையன்” என்ற திருச்சொல்லுக்கு அடுத்து அருளிச்செய்த திருச்சொல் “திருவின் மணாளன்”!

At 1:42, “பூவின்மிசை நங்கை” லலிதமாக, மென்மையாக, ம்ருதுவாக, அசைந்து, அசைந்து எழுந்தருளும் தோரணையைப்பார்த்தவுடன் இவள்தான் நமக்கு புகலிடம் என்று உடனே புலப்படுகின்றது. பிராட்டியின் திருக்கண்களும், திருமுகமும், கருணையயும் வாத்ஸல்யத்தையும் வர்ஷிக்கின்றன. திருப்பவளம் நம்மைப்பார்த்து களிப்புற்று விகஸிக்கின்றது. நம்மை ரக்ஷித்து, எல்லாவற்றையும் நமக்கு அனுக்ரஹிக்க ஸித்தமாக இருக்கின்றாள் என்பதும் ப்ரத்யக்ஷம். ஸ்வாமி பராஶர பட்டரின் ஸ்ரீஸூக்தி “aiSvaryam aksharagatim paramam padam vA” நம் நெஞ்சைத்தழுவுகின்றது.

At 7:10, 7:58, 14:20 and 14:40, பிராட்டியின் திருப்புருவங்களை மிக அருகில் (stunning close-ups) ஸேவிக்கும் பேறு பெறுகின்றோம். “yad bhrUbhanagA: pramANam sthira cara racanA tAratamyE murArE:” என்னும் ஸ்ரீபட்டரின் திருவாக்கு நம் மனத்தை வருடுகின்றது.

சென்ற வாரமும் திருக்குடந்தை – ஸர்வேஶ்ச்வரனை சேவிக்கும் பேறு பெற்றோம். இன்றும் திருக்குடந்தை – ஜகன்மாதாவை ஸேவிக்கும் பேறு.

இவள் “மையார் கருங்கண்ணி கமல மலர் மேல் செய்யாள்” — அதனால் அவன் “செந்தாமரைக்கண்ணன்”!

இவள் “இன்னமுதத்திருமகள்” — அதனால் அவன் “அப்பொழுதைக்கப்பொழுது என் ஆராவமுதம்”!

இவள் “nIlatOyata madyastA vidyullEkEva bhAsvarA” என்றபடி கார்முகிலுக்கு ஒளி கூட்டும் மின்னல் கீற்று — அதனால் அவன் திருக்குடந்தையின் “பொற்சுடர்!

இவள் “கோலமலர்ப்பாவை” — அவன் “சுவையன்”!

At 13:12, “மாதவமனோஹரி”யின் திருமார்பில் “சுவையன்” நித்யவாஸம் செய்வதை ஸேவிக்கும் பேறு பெறுகின்றோம். இது அவனுடைய “அகலகில்லேன்”!

அநுரூப தாம்பத்யம் இங்கு ப்ரத்யக்ஷம்! Enjoy the Bliss!

http://www.youtube.com/watch?v=o5wes47Qbm0

Courtesy: Sri Vasudevan Swami

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here