Today Irapathu-ezhaam Thirunaal – Thirukaithala Sevai

0
784 views

இராப்பத்து ஏழாம் திருநாள் : இன்று திருக்கைத்தல ஸேவை எனப்படும் நிகழ்ச்சி நடைபெறும்

இராப்பத்து ஏழாம் திருநாள் : இன்று திருக்கைத்தல ஸேவை எனப்படும் நிகழ்ச்சி நடைபெறும். திருவாய்மொழியில் திருவரங்கத்திற்கான மங்களாசாஸனமாக அமைந்துள்ளது 7ஆம் பத்து 2ஆம் திருவாய் மொழிப் பதிகம் “கங்குலும் பகலும்”. நம்மாழ்வாராகிய பராங்குசன் தன்னிலை மாறி பெண் நிலை அடைந்து பராங்குச நாயகியாகிய தலைமகள் திருவரங்கனைக் கண்டு மனம் உருகி, கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கும் நிலையே “கங்குலும் பகலும்” பதிகத்தில் பேசப்படுகிறது. அதனால்தான் இன்றைய தினம் நம்மாழ்வார் பராங்குச நாயகியாய் காட்சியளிப்பார். இன்று நம்பெருமாள் போர்த்திக் கொண்டு புறப்படுவதும், பரமபத வாசலில் திரைபோட்டு மாலைசாற்றிக் கொள்வதும் கிடையாது. (அதற்குக் காரணம் இன்று நம்பெருமாள் நம்பெருமாளாகவே புறப்பாடு கண்டருளுகிறார். இன்று அவர் ஜீவாத்மா பரமபதத்துக்குச் செல்லும் நிகழ்ச்சியை நடித்துக் காண்பிப்பதில்லை) நம்பெருமாள் இன்று அதிக திருவாபரணங்கள் சாற்றிக்கொள்ளாமல், 5 அல்லது 6 பீதாம்பரங்களை அடுக்காக சாற்றிக்கொண்டு புறப்பாடு கண்டருளுவார். நம்பெருமாள் அர்ச்சகர்களின் கரங்களில் எழுந்தருளியிருந்து (கைத்தல சேவை) திருமாமணி மண்டபத்தின் மேல் குறட்டுக்கு வந்து நம்மாழ்வாருக்கு ஸேவை ஸாதிப்பார். நம்மாழ்வார் ஸந்நிதிக்காரர் அரையர்களுக்கு சாத்துபடி வேளையம் ஸம்பாவனை ஸமர்ப்பித்திடுவார்

Source: srirangam groups

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here