Daya Satakam – First Decad

2
1,087 views

Swamy Desikan euologises and salutes the defining DayA guNam of Lord Srinivasa in the DayA Satakam. He considers that this DayA guNam is solely responsible for the upliftment of the chetanas.

This first decad is in Anushtup meter. Swami Desikan affirms that Lord Venkateswara is eminently suitable for worship and adoration. He is the ocean of mercy. He is the field out of which grows the four fruits of PurushArtham ie dharmam, artham, kAmam and mOksham. Following Srivaishnava practises, Swami Desikan commences the composition with salutation to Tirumala Hills, AchArya Paramparai, Azwars, ParAsara Muni, VishvaksEnar, Sri Devi, Bhumi Devi, Neela Devi and finally to Lord Srinivasa.

Emperuman is in five different forms as Para, VyUha, Vibhava, Archa and AntaryAmi. Para VAsudevan is a huge ‘karumbu (sugar cane). However, this karumbu can be enjoyed by only NithyAs and MuktAs. So out of DayA Devi’s insistance, this karumbu became a big ocean of karumbu rasam, which are but VyUha avatharams. Once again these VyUha AvathArams are accessible only by yogis. So instead of staying at unreachable places, this karumbu rasam overflowed and flooded earth as Vibhava Avatharams such as Rama, Krishna etc. But once again, these avatarams are accessible only to people living at those times. So to be enjoyed by everyone, the karumbu rasam solidified as Thirumalai so that chetanAs of all periods can access Him. All this happened as the Lord is dAsan to DayA Devi!

1)

ப்ரபத்யே தம் கிரிம் ப்ராய: ஸ்ரீநிவாஸ அனுகம்பயா

இக்ஷுஸார ஸ்ரவந்த்யா இவ யந்மூர்த்யா சர்க்கராயிதம்.

பொருள் – ஸ்ரீநிவாஸனுடைய தயை என்பது கருப்பஞ்சாறாகப் பெருகி உள்ளது. இது ஆறு போன்று ஓடிச்சென்று, சர்க்கரைக் கட்டி போன்று உறைந்து நின்றது. இப்படிப்பட்ட சர்க்கரை மலையாகிய திருவேங்கடமலையை நான் சரணம் அடைகிறேன்.

2)

விகாஹே தீர்த்த பஹுளாம் சீதளாம் குரு ஸந்ததிம்

ஸ்ரீநிவாஸ தயா அம்போதி பரிவாஹ பரம்பராம்

பொருள் – ஸ்ரீநிவாஸனின் தயை என்பது பெரிய ஏரி போன்று உள்ளது. அதிலிருந்து ஓடிவரும் குளிர்ந்த நதியில் ஆங்காங்கே உள்ள படித்துறைகளாக ஆசார்ய பரம்பரை உள்ளது. அவற்றில் இறங்கி நான் நீராடுகிறேன்.

3)

க்ருதிந: கமலா வாஸ காருண்ய ஏகாந்திந: பஜே

தத் தே யத் ஸூக்தி ரூபேண த்ரிவேதீ ஸர்வ யோக்யதாம்

பொருள் – மூன்று வேதங்களும் ஆழ்வார்களின் ப்ரபந்தங்கள் மூலமே அனைவரும் கற்கும் விதமாக அமைந்தன. ஸ்ரீநிவாஸனின் தயை என்பதை மட்டுமே தங்கள் புகலிடம் என்று புகுந்த ஆழ்வார்களின் பிரபந்தங்களையே, அந்தப் பிரபந்தங்களை அருளிச் செய்த ஆழ்வார்களையே நான் விடாமல் தொழுகிறேன்.

4)

பராசர முகாந் வந்தே பகீரத நயே ஸ்த்திதாந்

கமலா காந்த காருண்ய கங்கா ப்லாவித மத்விதாந்

பொருள் – பகீரதன் பெரும் தவம் செய்து கங்கையை உலகிற்குக் கொண்டு வந்தான். இது போன்று பராசரர் முதலான முனிவர்கள், ஸ்ரீநிவாஸனின் தயை என்னும் கங்கையைக் கொண்டு வந்தனர். அந்த நதியில் நம்மை மூழ்கச் செய்த அவர்களை நான் வந்தனம் செய்கிறேன்.

5)

அசேஷ விக்க்ந சமநம் அநீக ஈச்வரம் ஆச்ரயே

ஸ்ரீமத: கருணா அம்போதௌ சிக்ஷா ஸ்ரோத இவ உத்திதம்

பொருள் – ஸ்ரீநிவாஸனை நாம் அடைவதற்குத் தடையாகவுள்ள அனைத்து இடையூறுகளையும் நீக்குபவர்; ஸ்ரீநிவாஸனின் கருணை என்ற ஏரியில் இருந்து “தவறு செய்பவர்களைத் திருத்துவது” என்ற வாய்க்கால் போன்று வெளிவந்தவர்; ஸ்ரீநிவாஸனின் சேனைக்குத் தலைவராகவுள்ளவர் – இப்படிப்பட்ட விஷ்வக்சேனரை வணங்குகிறேன்.

6)

ஸமஸ்த ஜநநீம் வந்தே சைதந்ய ஸ்தந்ய தாயினீம்

ச்ரேயஸீம் ஸ்ரீநிவாஸஸ்ய கருணாம் இவ ரூபிணீம்

பொருள் – இந்த உலகம் முழுமைக்கும் தாயாக உள்ளவளும், ஸ்ரீனிவாஸனின் கருணையே வடிவம் எடுத்தது போன்றவளும் , அவனிடத்தில் நாம் ஈடுபட வேண்டும் என்ற ஆவல் உண்டாக ஞானம் என்னும் தாய்ப்பாலை அளிப்பவளும், ஸ்ரீனிவாஸனுக்கே சிறப்பை அளிப்பவளும் ஆகிய அலர்மேல்மங்கையை வணங்குகிறேன்

7)

வந்தே வ்ருஷகிரி ஈசஸ்ய மஹிஷீம் விச்வ தாரிணீம்

தத் க்ருபா ப்ரதிகாதானாம் க்ஷமயா வாரணம் யயா

பொருள் – இந்த உலகம் முழுவதையும் தாங்குபவளும், ஸ்ரீநிவாஸனின் மஹிஷியும், ஸ்ரீநிவாஸனின் கருணை நம் மீது விழுவதற்கு ஏற்படும் தடைகளைத் தடுப்பவளும், க்ஷமை என்ற பெயர் கொண்டவளும் ஆகிய பூமாதேவியை வணங்குகிறேன்.

(8)

நிசாமயது மாம் நீளா யத் போக படலைர் த்ருவம்

பாவிதம் ஸ்ரீநிவாஸஸ்ய பக்த தோஷேஷு அதர்சநம்

பொருள் – இவளுடைய போக மயக்கங்கள் மூலமாக ஸ்ரீநிவாஸனின் கண்கள் நம்முடைய குற்றங்களை காணாமல் மறைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நீளாதேவி என்னும் நப்பின்னை, தனது திருக்கண்களால் என்னைக் கடாக்ஷிப்பாளாக.

9)

கமபி அநவதிம் வந்தே கருணா வருணாலயம்

வ்ருஷ சைல தடஸ்தாநாம் ஸ்வயம் வ்யக்திம் உபாகதம்.

பொருள் – எல்லை இல்லாததும், திருமலையின் அருகில் உள்ளவர்களுக்கு தானாகவே தோற்றம் அளிப்பதும் ஆகிய கருணை என்ற கடலை வணங்குகிறேன்.

10)

அகிஞ்சந நிதிம் ஸூதிம் அபவர்க்க த்ரிவர்க்கயோ:அஞ்சனாத்ரி

ஈஸ்வர: தயாம் அபிஷ்டௌமி நிரஞ்ஜநாம்.

பொருள் – எந்த விதமான கதியும், வேறு ஏதும் உபாயம் இல்லாமலும் உள்ளவர்கள் சரணம் அடைவதற்கு ஏற்ற நிதி போன்றதும்; மோக்ஷம் என்பதை வழங்குவதும்; அறம்-பொருள்-இன்பம் என்பவற்றை அளிப்பதும்; எந்த விதமான தோஷங்களும் அற்றதும் ஆகிய ஸ்ரீநிவாஸனுடைய தயை என்னும் தேவியைத் துதிக்கிறேன்.

Will be continued..

by Geetha Rangarajan

Print Friendly, PDF & Email

2 COMMENTS

  1. “Thirukkanden, Thirumeni kanden,
    Thigazhum Arukan ani niramum kanden,
    Serikillarum Ponnazhi kanden,
    Puri sangam kaikkanden
    Enazhi vannan pal Indru” .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here