Eramalur Sri Sundharavaradha Lakshminarayana Perumal Sannithi Mahasamprokshanam

0
862 views

Sri Sundharavaradha Lakshminarayana Perumal Sannithi Mahasamprokshana Pathrika and Appeal
Eramalur Village. Vandavasi Taluk. Thiruvannamalai Dt. Tamilnadu.

Dear Asthikas,
The divine power of Sri Lakshminarayana has unified us to carry out work on renovating a Perumal Sannithi. The renovation work of Sri Sundharavaradha Lakshminarayana Perumal Sannithi , Eramalur village, in Thiruvannamalai district, is nearing completion and is due for Mahasamprokshanam (Kumbabishekam) on 12/09/2018 – Wednesday. This temple is located in Eramalur village (15 kms from Vandavasi and 55 kms from Kanchipuram).
With the support of Srivaishanavas spread worldwide and their sincere prayers, we were able to attend most of the pending works which is now almost complete. Nevertheless, this would not have been possible without the divine guidance and magnanimous participation from every single devotee, despite the huge size of the temple.

We would like to express the voice of Agraharavasis via this message. We as Agraharavasis would like to extend our heartfelt thanks and gratitude, to every individual, who helped us restore the glory of this temple and made this possible, by liberally contributing towards this noble cause.

Eramalur Sri Sundharavaradha Lakshminarayana Perumal Sannithi Kainkarya Trust
Account number: 378405001380
IFSC code – ICIC0003784
ICICI Bank, Vandavasi Branch.

We unitedly welcome you all to participate along with us in the Mahasamprokshanam slated on 12/09/2018. Please treat this as a personal invite and request all devotees to attend this holy function and get blessed by the almighty.

For further details, you may contact below representatives.
Sri. Balaji – 9840578398
Sri. Shrikrishnadhasan- 9994783677

எரமலூர் ஸ்ரீ சுந்தரவரத லக்ஷ்மீநாராயணப்பெருமாள் ஸன்னிதி மஹாஸம்ப்ரோக்ஷணப் பத்திரிகை மற்றும் விண்ணப்பம்

முக்கிதரும் நகரேழில் முக்கியமாம் கச்சியம்பதிக்குத் தெற்கே சுகக்ஷேத்ரமான வந்தவாசிக்கு அருகில் சுமார் 15கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது எரமலூர் என்னும் ஸ்ரீக்ராமம். மேற்படி ஸ்ரீக்ராமத்தில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படும் ஸ்ரீ சுந்தரவரத லக்ஷ்மீநாராயணப்பெருமாள் ஸன்னிதியானது கிட்டத்தட்ட நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்திருந்தது. சென்ற துன்முகி வருஷம் கார்த்திகை மாதம் 8ஆம் தேதி (23.11.2016) மேற்படி ஸன்னிதியின் புனருத்தாரண திருப்பணிகள் பாலாயம் செய்யப்பட்டு தொடங்கப்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திகர்களின் பேராதரவுடன் நடைபெற்று வந்தத் திருப்பணிகள் தற்போது நிறைவடந்துள்ளது. மேற்படி ஸன்னிதியின் மஹாஸம்ப்ரோக்ஷணம் நிகழும் விளம்பி வருஷம் ஆவணி மாதம் 25ஆம் தேதி (10.09.2018, திங்கட்கிழமை) தொடங்கி ஆவணி மாதம் 27ஆம் தேதி(12.09.2018, புதன்கிழமை) வரை நடைபெறவுள்ளதால் ஆஸ்திகர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு ஸ்ரீ சுந்தரவரத லக்ஷ்மீநாராயணப்பெருமாளின் க்ருபாகடாக்ஷத்திற்குப் பாத்திரராகும்படி ப்ரார்த்திக்கிறோம்.

மஹாஸம்ப்ரோக்ஷணம் – 12.09.2018, சுக்லபக்ஷ த்ருதியை திதி, சித்திரை நக்ஷத்ரம் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 10.30 மணிக்குமேல் 11.30 மணிக்குள் வ்ருச்சிக லக்னத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் பத்திரிகையை கண்ணுறும் அன்பர்கள் மேற்படி மஹாஸம்ப்ரோக்ஷணம் விமர்சையாக நடக்க தங்களால் இயன்ற பொருளுதவி அளித்து ஸ்ரீ சுந்தரவரத லக்ஷ்மீநாராயணப்பெருமாளின் க்ருபாகடாக்ஷத்திற்குப் பாத்திரராகும்படி ப்ரார்த்திக்கிறோம். நன்கொடை அளிக்கு விரும்பும் ஆஸ்திகர்கள் கீழ்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தி அடியோங்களுக்கு உடனடியாக தங்கள் விவரங்களை ரசீது அனுப்பிவைக்க ஏதுவாக தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

Eramalur Sri Sundharavaradha Lakshminarayana Perumal Sannithi Kainkarya Trust
Account number: 378405001380
IFSC code – ICIC0003784
ICICI Bank, Vandavasi Branch.

குறிப்பு: மஹாஸம்ப்ரோக்ஷணத்திற்கு வருகைத்தரும் அன்பர்களுக்காக வந்தவாசியிலிருந்து ஆட்டோ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 3 நாட்களும் தங்கி அந்வயிக்க விரும்பும் அன்பர்கள் முன் கூட்டியே தங்கள் விவரங்களை பகிர்ந்துகொண்டால் தங்குமிடத்திற்கு ஏற்பாடு செய்யப்படும்.

தொடர்புக்கு,
ஸ்ரீ.பாலாஜி – 9840578398
ஸ்ரீக்ருஷ்ணதாஸன் – 9994783677

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here