Thirukkannamangai Swami Desikan Hevilambi Varusha 750th Thirunakshatra Utsavam: Days 1-4

0
485 views

The 750th Thirunakshathra Mahothsavam of Swami Desikan commenced at Thirukkannamangai Divya Desam on the morning of September 22, 2017 Sri Hevilambi  Varusha Aavani Chithirai). This Utsavam will be celebrated till October, 2nd  2017. On the first day, vishesha thirumanjanam was performed for Sri Hayagrivar and Swami Desikan in the morning at around 9 am. After thirumanjanam, Vedam and Prabhandam parayanam commenced. Thirupallandu, Thirupalliezhuchi, Thiruppavai followed by Mudal and Irandam Patthu in Periazhwar Thirumozhi, Adaikala Patthu of Desika Prabhandam were recited. This was followed by Satrumurai and Thadiyaradhanam.

In the evening at around 5 pm, purappadu for Swami Desikan took place in a Noodhana Padichattam (New Goldplated Padichattam) amidst Veda Parayanam and Arulicheyal (Divya Prabandham) Ghoshti. Prior to this, Thiruvaimozhi Mudal Pattu and Artha Panchakam from Desika Prabandham was recited. During the purappadu, Mudal Thiruvandhadhi was recited. Today’s utsavam concluded with Satrumurai.

On September, 23rd, 2017,  Day 2 of Utsavam was celebrated. In the morning thirumanjanam was performed for Sri Hayagreevar and Swami Desikan with recitation of Pasurams from Thirupallandu, THirupalliezhuchi, Thiruppavai, Periya Thirumozhi 3,4,5 hundreds, and Amritharanjani from Desika Prabhandam, After sattrumurai Thathiyaradhanai took place. Like wise in the evening pasurams are recited with Swami Desikan Thiruveedhi Purappadu.

On Day 3 utsavam (September 24, 2017), vishesha thirumanjanam was performed for Swami Desikan in the morning today at around 9 am. After thirumanjanam, Thirupallandu, Thirupalliezhuchi, Thiruppavai followed by Nachiyar Thirumozhi, Amrithasvahini of Desika Prabhandam were recited. This was followed by Satrumurai and Thadiyaradhanam.

In the evening at around 5 pm, purappadu for Swami Desikan took place amidst Veda Parayanam and Arulicheyal (Divya Prabandham) Ghoshti. Meanwhile, Thiruvaimozhi Mundram Pattu was recited at the Sannidhi and Mundram Thiruvandhadhi was recited during the purappadu. The days utsavam concluded with Satrumurai.

Day 4 utsavam was celebrated well on September 25th, 2017​; Hevilambi Varusha Purattasi Anusham. Vishesha thirumanjanam was performed for Swami Desikan and Sri Hayagrivar in the morning at around 9 am. After thirumanjanam, Thirupallandu, Thirupalliezhuchi, Thiruppavai followed by Perumal Thirumozhi, Paramapada Bhangam of Desika Prabhandam were recited. This was followed by Satrumurai and Thadiyaradhanam. In the evening at around 5 pm, purappadu for Swami Desikan took place amidst Veda Parayanam and Arulicheyal (Divya Prabandham) Ghoshti. Nanmugan Thiruvandhadhi, Thiruvaimozhi Nangam Pattu and Mei Vrathamanyam of Desika Prabhandam were recited. The day’s utsavam concluded with Satrumurai.

The 11-day utsavam commenced on ​September 22nd, 2017 ​and will be celebrated till October 2nd, 2017.

திருக்கண்ணமங்கை ஸ்ரீ தேஸிகன் ஸந்நிதியில் நேற்று (22.09.2017)     750 வது திருநக்ஷத்ர மஹோத்ஸவம், ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ தேஸிகனுக்கு திருமஞ்சனத்துடன் ஆரம்பம் ஆனது. நேற்று காலை சுமார் 9 மணியளவில் ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ தேஸிகனுக்கு திருமஞ்சனமாகி, வேதத்துடக்கம் ஆகி, பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை துடங்கி திவ்யப்ரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழியில் இரண்டு பத்து, தேஸிகப்ரபந்தத்தில் அடைக்கலப் பத்து சேவிக்கப்பட்டது.

நேற்று  மாலை சுமார் 5 மணியளவில் ஸ்ரீ தேஸிகன் வேத பாராயண, அருளிச்செயல் கோஷ்டியுடன்  திருப்படிச்சட்டத்தில் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார். அதற்கு முன் திருவாய்மொழி முதல் பத்தும் தேஸிகப்ரபந்தத்தில் அருத்தபஞ்சகமும் சேவிக்கப்பட்டது. திருவீதியில் முதல் திருவந்தாதி சேவிக்கப் பட்டது. பின் சாற்றுமறையுடன் நேற்றைய உத்ஸவம் நிறைவு பெற்றது.

காலை 8 மணிக்கு ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ தேஸிகனுக்கு விசேஷ திருமஞ்சனம் ஆகி திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, பெரிய திருமொழியில் 3,4,5 பத்துக்கள், தேஸிகப்ரபந்தத்தில் அமிர்தரஞ்சனி ஸேவிக்கப்பட்டு சாற்றுமுறை முடிந்து ததியாராதனம் நடைபெற்றது.

மாலை திருவாய்மொழி 2 ம் பத்து, தேசிகப்ரபந்தம்அதிகார ஸங்க்ரஹம் ஸேவிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு ஸ்ரீ தேசிகன் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார். வீதியில் 2 ம் திருவந்தாதி ஸேவிக்கப்பட்டது. சாற்றுமுறை 10 பாசுரம் சேவிக்கப் பட்டதுஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து இன்புற்றனர்.

திருக்கண்ணமங்கை ஸ்ரீ தேஸிகன் உத்ஸவத்தில் 3ம் நாளான நேற்று காலை 9 மணியளவில் விசேஷ திருமஞ்சனத்துடன் துடங்கி பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை நாச்சியார் திருமொழி முழுவதும், தேசிகப்ரபந்தத்தில் அமிர்தஸ்வாகினி யும் சேவிக்கப்பட்டு மதியம் சாற்றுமுறை ஆனபின் ததியாராதனம் நடந்தது.

மாலை சரியாக 5 மணிக்கு ஸ்வாமி தேஸிகன் அத்யாபக வேத பாராயண கோஷ்டிகளுடன்  திருவீதிப் புறப்பாடு கண்டருளினார். திருவாய்மொழி 3ம் பத்து சந்நிதியில் ஸேவிக்கப் பட்டது. திருவீதியில் 3 ம் திருவந்தாதி சேவிக்கப்பட்டது. புறப்பாடு முடிந்து சாற்றுமறையுடன் இன்றைய உத்ஸவம் பூர்த்தி ஆனது.

திருக்கண்ணமங்கை, ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் 750வது திருநக்ஷத்ர மஹோத்ஸவத்தில் 4 ம் நாளான இன்று காலை 9 மணிக்கு ஸ்ரீ ஹயக்ரீவர் மற்றும் ஸ்ரீ தேசிகனுக்கு விசேஷ திருமஞ்சனம் ஆகி  திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, பெருமாள் திருமொழி முழுதும், தேசிகப்ரபந்தத்தில் பரமபத பங்கம் சேவிக்கப்பட்டு சாற்றுமுறை, ததியாராதனம் நடந்தது.  மாலை 5 மணிக்கு ஸ்ரீ தேசிகன் நான் முகன் திருவந்தாதி சேவிக்கப்பட்டு திருவீதிப் புறப்பாடு கண்டருளினார். சுமார் 7மணிக்கு திருவாய்மொழி 4ம் பத்து, தேசிகப்ரபந்தத்தில் மெய் வ்ரதமான்​மி​யம் சேவிக்கப்பட்டு சாற்றுமுறையுடன் இன்றைய உத்சவம் முடிந்து இன்றைய நிகழ்ச்சி முடிவு பெற்றது.

The following are some of the photographs taken on the first four days of the utsavam…

Swami Desikan 750th Thirunakshatra Utsavam Day 1 & 2 (September 22 & 23, 2017)

Swami Desikan 750th Thirunakshatra Utsavam Day 3 (September 24, 2017)

Swami Desikan 750th Thirunakshatra Utsavam Day 4 (September 25, 2017)

Courtesy: Sri Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here