Athirathra Yagamum Vaikasi Utsavamum

5
1,804 views
Kanchi Sri Devaperumal utsavam
In recent days Athiratha Yagam was conducted by Kerala brahmin who belonged to Viswamitra gotram. The author Sri U.Ve Satakopa Thathachariar correlates the two events  Athiratha Yagam to Sri Devaperumal  Vaikasi Brahmotsavam .
அதிராத்ரயாகமும் வைசாகோத்ஸவமும்.
                ஸமீபகாலத்தில் ஸ்வாமி தேசிகனின்  கோத்ரமான விச்வாமித்ரகோத்ரத்தை சேர்ந்த ஒரு கேரளப்ராஹ்மணர் அதிராத்ர யாகத்தை – ச்யேனசிதியில்  செய்வதை காண அவகாசம் கிடைத்தது, ஸாக்ஷாத்பசு இல்லை,மாவினால் செய்யப்பட்ட பசுதான், மற்றபடி எல்லாம்  ஸமானம்.தாஸன் மிகவும் ரஸனீயமான பல விஷயங்களை தெரிந்துக்கொண்டேன்.
ஸ்வாமி தேசிகன் புண்டரீகாக்ஷயஜ்வனஃ பௌத்ரஃ என தன்னை  கூறிக்கொள்கிறார், ஆயினும் யாகம் அனுஷ்டித்ததாக தெரியவில்லை.
நமது ஸம்ப்ரதாயத்திலும் யாகம் செய்ய ஊக்குவிக்க  வேணும் என தோன்றியது
ஸ்ரீஆளவந்தார்  திருவநந்தபுரம் சென்றதால் யோகபரம்பரை நின்றுவிட்டது, .ஸ்ரீபாஷ்யகாரர், மற்றும் ஸ்வாமி தேசிகன் யஜ்வாக்களின் பரம்பரையில் அவதரித்தும்  ஒருவர் ஸந்யாசியாகவும் மற்றவர் ஸம்ப்ரதாயத்தை ஸம்ரக்ஷிக்க அநேகம் க்ரந்தங்களை அனுக்ரஹிக்கவேண்டிவந்ததாலும் விரக்தரானபடியாலும் நமது ஸம்ப்ரதாயத்தில்  யாக ப்ரக்ரியை அதிகம்ப்ரசாரத்தில் இல்லையோ என தோன்றுகிறது,மத்யகாலத்தில் ஸர்வதர்மமூலமான வேதத்தின் அத்யயனத்திலேயே ச்ரத்தை இல்லை, யாகம் அனுஷ்டிப்பது  எப்படி ஸாத்யமாகும் என முதலில் தோன்றியது.
Athiratha Yagam  2015 -1Athiratha Yagam  2015 -2
கடைசி  தினம் இங்கு நடைபெற்றுவந்த ச்யேநசிதியில் அதிராத்ரயாகத்தை கண்ட பிறகு ஸ்வாமி தேசிகன் யாகானுஷ்டானம் செய்ததாக காணவில்லை என நினைத்தது தவறு என்பதாக தோன்றியது,
  ஏழுவிதமான ஸோமயாகத்தில் ஆறாவதான அதிராத்ரயாகம் உத்தராயணத்தில் 12 திவஸங்களில் செய்யவேண்டிய யாகமாகும், இதில் உத்தரவேதியில் ஆயிரம் இஷ்டிகைகளை- சுட்டகற்களை கொண்டு ச்யேந-கருடரூபத்தில் அக்னிக்கு மந்த்ரபுரஸ்ஸரமாக ஆதாரத்தை நிர்மிக்கவேணும், பிறகு அதில்ஆஹவனீயத்தில் நின்றும் அக்னியை ப்ரதிஷ்டை செய்து அக்னீஷோமீயதேவதைகளை குறித்து வபாஹோமம் மற்றும் புரோடாசாஹுதிகளை செய்து ஸுத்யாஹஸ் எனப்படும் மறுதினம் ப்ரபாதகாலத்தில் ஸோமலதையை பிழிந்து ரஸத்தை எடுத்து ஸோமாஹுதி, ஸவனீயபசுவின் வபாஹோமம் புரோடாசாதிஹோமம் என அனேகம் ஹோமங்கள் நடைபெறும்.,ப்ராதஸ்ஸவநம், மாத்யந்திநஸவநம், த்ருதீயஸவநம்.முதலியவைகளில் அநேக ஸ்தோத்ரம்- ஸாமகானம்,சஸ்த்ரம் முதலிவைகளுடன் ஸோமரஸத்தை ஹோமம் செய்வார்கள்.பன்னிரண்டாவது தினம் அவப்ருதேஷ்டி முடிந்து அவப்ருதம் ஆனபிறகு உதயனீயேஷ்டி,மைத்ராவருணேஷ்டி முடிந்து ஸக்து-அரிசிமாவு ஹோமம் முடிந்து யூபம் முலியவைகளை விசர்ஜநம் செய்து உத்தரவேதியில் அக்னியை உபஸ்தாநம் செய்து அக்னிஹோத்ரசாலையிலுள்ள த்ரேதாக்னியையும் (ஆஹவனீயம், கார்ஹபத்யம் தாக்ஷிணாக்னி) அரணியில் ஸமாபனம்-ஏற்றிக்கொண்டு யஜமானன் யாகசாலையில் நின்றும் வெளிப்பட்டு ஸ்வக்ருஹத்தில் அக்னியை ஸ்தாபிப்பது என அநேககார்யகலாபத்துடன் கூடிய யாகம் அதிராத்ரயாகம்.மேலும் யாகத்தில் வபை மற்றும் சிலவஸ்துக்களை தவிர்த்து மற்ற எந்தவஸ்துவை ஹோமம் செய்தாலும் உடன் அதின் சேஷத்தை –மீதியை ஸம்பந்தப்பட்ட ரித்விக்குகளும் யஜமானனும் மந்த்ரம் சொல்லி ஸ்வீகரித்து உண்பார்கள்.இதை இடாபக்ஷணம் என்பார்கள்.
இதை முழுவதுமாக கண்ட  தாஸனுக்கு கிடைத்த அநுபவத்தை சிறிது விஞ்ஞாபிக்கிறேன்,.
முன்பு  ப்ரஹ்மவாதிகளுக்கு ஒரு ஸம்சயம் உண்டாயிற்று, எல்லா யஞ்ஞத்துக்கும் அக்னிஹோத்ரம் தான் முதலாகும், முதலில் அக்ந்யாதாநம் செய்து பிறகு  தர்சபூர்ணமாஸாதி, ஸோமயாகம் செய்யவேணுமென ஸூத்ரகாரரும் குறிப்பிட்டுள்ளார்,  எல்லா யஞ்ஞத்துக்கும் அக்னிஹோத்ரம்  முதலாகும் என்றால்,அதுக்கு எது முதலாகும்  என கேள்வி, பதில் வேறுசாகையில் கூறியபடி வத்ஸம்- கன்றுகுட்டிதான் அக்னிஹோத்ரத்துக்கு முதலாகும்  37,“வத்ஸோ வா அக்னிஹோத்ரஸ்ய ப்ராயணம்  அக்னிஹோத்ரம் யஞ்ஞானாம்” என யஜுர்வேதம்.
இனி வரும் வாக்யங்கள் இந்த அக்னிஹோத்ரத்தை ப்ரஸம்ஸை செய்ய இதில்   ஸோமயாகபுத்தியை  உண்டுபண்ணும் வாக்யங்களாகும்,
Athiratha Yagam  2015 -3Athiratha Yagam  2015 -4
ஸோமயாகத்தில்  ஸதஸ், ஹவிர்தாநமண்டபம், ஆக்னீத்ரம், முதலியன ஆவச்யகமானபடியால் அவைகள் இந்த அக்னிஹோத்ரத்தில்  எவைகள் என காண்பிக்கப்படுகிறது,
38, “தஸ்ய ப்ருதிவீ ஸதஃ” ப்ருதிவீ- ஸதஸ்ஸாகும்,அந்தரிக்ஷம்- ஆக்னீத்ரம்,., த்யௌஃ- ஹவிர்தானமண்டபம், மழை ஜலம்- ஜலஸ்தானமாகும், நெல் முதலான ஓஷதிகள் பர்ஹிஸ்,-தர்பம், வநஸ்பதிகள்,-இத்மமாகும், திக்குகள்- பரிதிகள், ஆதித்யன்-யூபம்,யஜமானன்- பசு, ஸமுத்ரம்- அவப்ருதமாகும், ஸம்வத்ஸரம்- ஸ்வகாகாரம், இப்படியாக  அக்னிஹோத்ரிக்கு எல்லாம்  ஸோமயாகாங்கமாக ஸம்பாதிக்கப்பட்டாகிவிட்டது,இவன் பகலிலோ இரவிலோ பந்துக்களுக்கோ  வேறு யாருக்காவது எதை கொடுக்கிறானோ அதுவே தக்ஷிணாஸ்தானம், இப்படியாக ஸோமயாகபுத்தியை செய்வதால்  அக்னிஹோத்ரம் அதிசயத்துடன் கூடியதாகிறது, வேறு வஸ்துவில் வேறு புத்தியை செய்தால் அதிசயம் உண்டாகுமோ எனில்  உண்டு, உதாஹரணமாக ச்ராத்தத்தில்  தௌஹித்ரனிடத்தில் பித்ருபிதாமஹப்ரபிதாமஹ புத்தியால் அவனுக்கு  ஒரு அதிசயம் உண்டு, ஆதலாலே அவனை மாதாமஹன் நமஸ்கரிக்கிறார், அதுபோல் அக்நிஹோத்ரத்திலும் ஸோமயாகபுத்தி செய்வதால அதிசயமுண்டாகும், இதுபோல் அநேக இடங்களில் வேறு வஸ்துவில்  வேறுவிதமாக புத்தி செய்வதை காணலாம்,
 இந்த க்ரமத்தில்  பகவதாராதனத்தை யாகமாக ஸங்கல்ப்பித்தால்  அதில் அன்வயிப்பவர்கள் ருத்விக்குகளாகவும்  மற்றத்ரவ்யங்கள் யாகார்ஹ-யாகாங்கமாகலாம், ஆதலால் பகவதாராதனத்தில் யாக புத்திசெய்வதால் அதிசயமுண்டாகலாம். ஆராதனத்தை கூறும் ஸமயத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் 39,“ததோ யாகமாரபேத” என்றே ஸாதித்தார்.
இந்த க்ரமத்தில்   நம்மத்திகிரித்திருமாலுக்கு உத்தராயணத்தில் நடைபெறும் வைசாக உத்ஸவமே அதிராத்ரயாகமாகும், அதிராத்ரம் 12 திவஸங்கள் நடைபெறுகிறது, உத்ஸவமும் அங்குரார்பணம் முதலாக 12 தினங்கள் நடைபெறுகின்றன. எம்பெருமான் அக்னிஸ்தானம், “அக்ரம் நயதீதி அக்னிஃ”- அக்னி சப்தம் ஸாக்ஷாத்தாகவும்  எம்பெருமானை குறிக்கும்  என 40“ஸாக்ஷாதப்யவிரோதம் ஜைமினிஃ” என ப்ரஹ்மஸூத்ரம்,அவன் அலங்கரிக்கும் ,கோயில் ஸ்ரீதேசிகன் ஸந்நிதி,  மற்றும்  அபிஷேகமண்டபாதிகள்  ஆஹவனீய ,கார்ஹபத்ய, தாக்ஷினாக்னி ஸ்தானம். கங்கை கொண்டான் மண்டபம்  உத்தரவேதி ஸ்தானம்,காலை மாலை உத்ஸவங்கள் ப்ராதஸ்ஸவந, மாத்யந்தின ஸவன ஸ்தானம், யாகத்தில் நடைபெறும் ஸாமகானங்களின் ஸ்தாநத்தில் அருளிச்செயல், சஸ்த்ராதி ஸ்தானத்தில் வேதபாராயணம், புரோனுவாக்யை யாஜ்யை ப்ரயாஜம் ஸ்தானத்தில் மந்த்ரபுஷ்பம், ஹவிஸ் ஹோமஸ்தாநத்தில் ப்ரஸாத நிவேதனம், ஸோமரஸஸ்தாநத்தில்  தீர்தம், இடாபக்ஷணஸ்தாநத்தில்  கைங்கர்யபர்ர்களுக்கு ப்ரஸாத விதரணம்,
அவப்ருதஸ்தாநத்தில்  அவப்ருதம் ,உதயனீயேஷ்டி, மைத்ராவருணேஷ்டி ஸ்தானத்தில் த்வாதசாராதநம், அக்னி உபஸ்தான ஸ்தாநத்தில் இரவு உத்ஸவ பாராயணம், அரணியில் ஸமாபனஸ்தானத்தில் எம்பெருமான் திருமலைக்கு எழுந்தருளல்,
யாகத்தில் அநேகவிதமான ப்ரார்த்தனாரூபமாக மந்த்ரங்கள் சொல்லப்படுகின்றன .அதேக்ரமத்தில் , உத்ஸவத்தில்  காலை மாலைகளில்  பாரயணம்  சில பாகம் ப்ரார்த்தனா ரூபத்தில் முடிவடைகிறது.
முதல் வேளை காலை- 41,“பிதேவ புத்ரமபிரக்ஷதாத்,”-தகப்பனைப்போல் என்னை காப்பாற்றுவாயாக, என்ன அத்புதமான ப்ரார்த்தனை, 2 ஆம் தினம், காலை 42,“கரோது மாமநேநஸம்” என்னை பாபமில்லாதவனாக செய்யட்டும், இப்படியாக பல பல ப்ரார்த்தனையுடன்  நடைபெற்றது, திவ்யப்ரபந்தம் போல் நியதமான சாத்துமறை க்ரமம்(முதல்உத்ஸவத்தில்   முதல் திருவந்தாதி  முதலியன போல்  ) பாராயணத்தில் கிடையாது, எந்தபாகம்  நடைபெறுகிறதோ அங்கு முடிப்பது என வழக்கம், கல் வைத்த வாரம் பரீக்ஷை போல்  எந்த இடம் வரும் என்பது தெரியாது, சில தினத்தில  நம்மை பரீக்ஷிக்க எம்பெருமான்  மிகவும் கடினமான பாகத்தை முடிவில் வரும்படி செய்வார், அவனுக்கு இது லீலா விபூதி என்பதை நம்மை கொண்டு ஸ்மரிப்பான் அவ்வமயத்தில் தவறில்லாமல் முடிக்கவேணுமென  மனதால் ப்ராத்திப்பதுமுண்டு.
Athiratha Yagam  2015 -5Athiratha Yagam  2015 -6
அதிராத்ரயாகத்தின் ஸமாபனத்தில் ஸக்துஹோமத்தில் மந்த்ரம்,
43,“स त्वं नो नभसस्पत ऊर्जं नो धेहि भद्रया।
पुनर्नो नष्टमाकृधि पुनर्नो रयिंमाकृधि।”
நஷ்டமானதை மீண்டும் கொடு,முன்பு ஸம்பாதிக்காததையும் கொடுப்பாயாக.
உத்தரவேதியில் உபஸ்தான மந்த்ரம்
44,“ येग्नयः पुरीष्याः प्रविष्टाः पृथिवीमनु। तेषां त्वमस्युत्तमः प्रणो जीवातवे सुव।” அக்னியே,மண்ணால் நிர்மிக்கப்பட்டவைகள் ப்ருதிவியில் வந்தடைந்தன. அவைகளுக்குள் உத்தமமானவன் நீ, அப்படிப்பட்ட நீ நாங்கள் நீண்டகாலம் வாழும்படி செய்வாயாக.
45,“आपं त्वाग्ने मनसा ,आपं त्वाग्ने तपसा, आपं त्वाग्ने दीक्षया, आपं त्वाग्न उपसद्भिः ,आपं त्वाग्ने सुत्यया, आपं त्वाग्ने दक्षिणाभिः, आपं त्वाग्ने वशया, आपं त्वाग्ने स्वगाकारेण,।”
ஹே அக்னியே,  மனதால் –ஸங்கல்பம், உன்னை நான் அடைந்தேன், தபஸால்- சாப்பிடாமல் இருப்பதால், தானத்தால், தீக்ஷையால்,,உபஸத் ஹோமத்தால் , ஸோமக்ரஹ ஹோமத்தால், தக்ஷிணையால் , அவப்ருதத்தால்,வஸாஹோமத்தால் ,மீதி எல்லா யாக  அவயவங்களால் உன்னை நான் அடைந்தேன்,நீ என்னிடத்திலேயே இருப்பாயாக.
வேதத்தில் இதன்முன்பாக உள்ள மந்த்ரம் ,
 46“ருத்ரோ வா ஏஷ  யதக்னிஃ, யதா வ்யாக்ரஃ க்ருத்தஸ்திஷ்டதி, ஏவம் வா ஏஷஏதர்ஹி ஸஞ்சிதமேதைருபதிஷ்டதே நமஸ்காரைரேவைநம் சமயதி”
 இந்த அக்னி கோபமடைந்த புலியை போல் இருக்கிறது, இதை நமஸ்காரத்தால் சாந்தமடையும்படி செய்யவேணும் என்பதாக.
அரணியில் அக்னி ஸமாரோபந மந்த்ரம்
47,“अयं ते योनिः ऋत्वियो यतो जातो अरोचथाः।
तं जानन्नग्ऩ आरोहाथा ऩो वर्धया रयिम्।।”
இந்த அரணிதான் உன்னுடய ஸ்தானம், இதிலிருந்து உண்டான நீ  ஜ்வலிக்கிறாய், அக்னியே அதை  அறிந்து அதை ஏறுவாயாக,பிறகு எங்களுக்கு பணத்தை வளரச்செய்வாயாக,
இந்த க்ரமத்தில் எம்பெருமானின் ஸ்தானம் ஹஸ்திகிரியாகும், அந்த சிகரத்தில் பக்தர்களின் அபீஷ்டத்தை கொடுப்பதான பாரிஜாதமாக ஜ்வலிக்கிறாய், அதை  அறிந்து அதையே ஏறுவாயாக,பிறகு எங்களுக்கு கைங்கர்யமாகிற பணத்தை வளரச்செய்வாயாக,
 இப்படியாக அநேக அதிராத்ரயாகத்தை அனுஷ்டித்த ஸ்வாமி தேசிகன்
Athiratha Yagam  2015 -7Athiratha Yagam  2015 -8
48, “துரக விஹகராஜ ஸ்யந்தாந்தோளிகாதிஷு, ,,,,,,,,, அனுதினமனிமேஷைர் லோசனைர் நிர்விசேயம்” என்றும்  49“ஸத்யம் சபே வாரணசைலநாத வைகுண்டவாசேபி ந மேபிலாஷஃ” என்று ப்ரார்த்திக்க, ஸ்ரீபேரருளாளன் நம்மாழ்வாரைப்போல் லோகஸம்ரக்ஷணார்தம்  ஸ்வாமியையும் மீண்டும்  காஞ்சிக்கு  வரவழைத்துள்ளார், ஸ்வாமியின் ப்ரார்த்தனையினாலேயே இன்றளவும் இங்கு உத்ஸவம் நடைபெறுகிறது, ஆக ஸ்வாமி தேசிகன் தான்  இங்கு யஜமானன்,ஆனபடியால் த்வஜாரோஹணத்தின் முன்பாக பெருமாள் நிவேதநம் ஆகி த்வஜபடநிவேதனம் ஆனபிறகு ஸ்வாமி தேசிகனுக்கு இடாபக்ஷண ஸ்தாநத்தில் ஸ்ரீசடாரிஸமர்பணம்,மூன்றாம் திருநாள் மாலையுடன் ஸ்ரீசடாரி ஸமர்பணம்,ஐந்தாம் திருநாள்,மற்றும் தீர்தவாரிதினம் புண்யகோடிவிமான உத்ஸவத்தில்  ஸ்ரீதூப்புலில் பெருமாளு்க்கு நிவேதனம் செய்த ப்ரஸாதத்தை  .ஸ்ரீஸ்வாமிதேசிகனுக்கு நிவேதனம் செய்து பரிவட்டம் மாலை ஸ்ரீசடாரி ஸமர்பணம் நடைபெற்றவருகிறது.
“आपं त्वाग्ने मनसा ,आपं त्वाग्ने तपसा” முதலான உபஸ்தான ஸ்தாநத்தில்  த்வஜாவரோஹணத்தன்றும் ஸ்வாமி தேசிகன் ஸந்நிதியிலேயே வேதபாராயணம் முடிவுபெறுகிறது, இதின் முன்புள்ள மந்த்ரம்  “ருத்ரோ வா ஏஷ  யதக்னிஃ, யதா வ்யாக்ரஃ க்ருத்தஸ்திஷ்டதி, ஏவம் வா ஏஷஏதர்ஹி ஸஞ்சிதமேதைருபதிஷ்டதே நமஸ்காரைரேவைநம் சமயதி” என, இதையும் இங்கே அனுபவிக்கலாம், பெருமாள் வெட்டிவேர் சபரத்தில் நின்றும் இறங்கி வேகமாக எழுந்தருளி ஸ்ரீதேசிகனின் ஸந்நிதியில் திரும்பும் ஸமயம் அதிகம்பீரமாக ஸேவையாதிப்பார், பாராயணம் முடிந்து ஸ்ரீதேசிகனடியார்கள் அநேகநமஸ்காரங்களை செய்து அபசாரக்ஷமாபணத்தை ப்ரார்த்திப்பார்கள்.
“अयं ते योनिः ऋत्वियो यतो जातो अरोचथाः।
तं जानन्नग्ऩ आरोहाथा ऩो वर्धया रयिम्।।”  என்று ஆஹவனீயத்தில்  நின்றும்  அரணியில் ஸமாபனம் செய்யும் ஸ்தானத்தில் ஸ்வாமி தேசிகன் ஸந்நிதியில் ஆஹூதர்களான அடியார்களுக்கு விடைஸாதித்த பிறகு ஸ்வாமி ஸந்நிதியில் நின்றும் எம்பெருமான் திருமலைக்கு எழுந்தருள்கிறார், இப்படியிருக்க ஸ்வாமி யாகம் செய்யவில்லை என  நினைப்பது தவறு என உணர்த்தியது போல் தோன்றியது,
ஸ்ரீஸ்வாமிதேசிகன் ஸ்ரீவரதாராஜபஞ்சாசத்தில்  திருச்சின்னமாலையில்  ஹம்ஸஸந்தேசத்தில் உகந்தருளின ஸ்ரீபேரருளாளனின் வைசாக மஹோத்ஸவத்தை அடியார்களும் ஸேவித்து ஸ்ரீபாததூளியை சிரஸ்ஸில் தரித்து தன்யர்களாகலாம்.
DSC05891
Writeup : Sri U.Ve Satakopa Thathachariar
Print Friendly, PDF & Email

5 COMMENTS

  1. Great article about the special yaagam. very interesting. Tamil write up was inviting. Sorry, adiyen not very IT friendly to get your beautiful Tamil font. Thanks for sharing your divine experience.

  2. Excellent Article giving birds eye view of recently held Athiraathra Yaagam in Kerala and comparing it with Deva Perumal’s Vaisaakha Utsavam. Swamy’s articles have always been very insightful and deep in vedic thought.

  3. Adiyen, Very wonderful explanation for Athirathra soma yagam and correlating it with Vaikasi Utsavam of Sri Devaraja Swami. Adiyen if remembers correctly, was going through a similar article by Sri Uppiliappan Kovil Varadachar on Sri Swamy Desikan’s explanation of Vaikanasa Aagamam. In that Sri Swamy Desikan explains that the Three Agnis, viz, Grahyapatra, Ahavaneeyam and Dhakshinagni are treated as the moola murthy and the utsava bheras and upacharas are performed to Sriman Narayana as nithyaagnihotra by the Archaka Swamys in temples. Even in Pancharatra Pancha Samskaara ritual, the 5 parts, thaapa, pundra, naama, mantra and ijjya are given and Sri Vaishnavas perform the greatest of Yajjyaas, the Sriman Narayana Devathaaradhanam using the Ashtaakshari mantra.
    From there itself, Sri Swamy Desikan has been mentioning about the continuation of the Vedic Fires kept in the temples as Sriman Narayanaa’s archa murthys and how the Vedic fires are kept constantly with bhagavath and bhagavatha kaimkaryas.
    Requesting Vedoththamaas and Bhagavadhottamaas to pardon adiyen for any mistakes in adiyen’s understanding.
    Goodness if any – are truly due to Adiyen’s Acharya’s grace and faults if any are fully to Adiyen’s own shortcomings.

    Adiyen,
    Sri Ramanuja Daasan – Thriuvelliyangudi Kudi Kandhaadai Vijayaraghavan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here