Nityasamsaaris – Those Who Don’t Get Moksha

0
4,218 views
Sriman Narayana in Parkadal
நித்யஸம்ஸாரிகள்—–மோக்ஷத்தைப்பெறாதவர்கள்
ஆக்ஷேபமும் ஸமாதானமும்
( The English translation is available at the end of this article)
கர்மத்தினடியாக கிடைக்கும் ஸுகம் நாசத்துடன் கூடியது என்பதை அறிந்த ஜீவர்களுக்கு மோக்ஷத்தில் ஆசை பிறக்கும். பிறகு உபாயத்தை அனுஷ்டிக்க ப்ரவ்ருத்தி வரும், உபாயத்தை அனுஷ்டித்து மோக்ஷத்தை அடைகிறார்கள் என சாஸ்த்ரம். இங்கு எழும் கேள்வி,– லோகத்தில் மோக்ஷத்தைப்பெறாத நித்யஸம்ஸாரிகள் உள்ளனர் என்பதால் , நான் தான் அந்த நித்யஸம்ஸாரியாகலாமோ என ஸந்தேஹம் வரலாம். அவ்விதம் ஸந்தேஹம் வந்தால் அவனுக்கு மோக்ஷத்தில் ஆசையே வராதே என.
பதில்–பயனதிகமிருப்பின் ஸந்தேஹமிருந்தாலும் அதில் ஆசைவரும்அதடியாக ப்ரவ்ருத்தியும் வரும்.லோகத்தில் இதை காணலாம், பங்குசந்தையில் முதலீடு செய்தால் லாபமுண்டாகும் என நிச்சயம் இல்லை,ஸந்தேஹமே உள்ளது ஆயினும் லாபம் வந்தால் அதிகமாகும் என்பதால் சிலருக்கு அதில் ஆசை பிறக்கிறது அதில் ப்ரவ்ருத்தி செய்கிறார்கள்.
மேலும் உபாயத்தை அனுஷ்டித்தால் நிச்சயம் மோக்ஷம் வரும் எனும் நிச்சயத்தாலும் சிலருக்கு உபாயத்தில் ப்ரவ்ருத்தி வருகிறது.
நித்யஸம்ஸாரிகளே இல்லை என்று கூறினாலும் கடைசியாக ஒருவன் செல்லவேணும் அல்லவா அவன் நானாகலாமென நினைத்து தற்சமயம் மோக்ஷத்தில் ப்ரவ்ருத்தி செய்யாமலிருக்கலாம். ஆக நித்யஸம்ஸாரி உண்டு என அறிந்தாலும் மோக்ஷத்தில் ஆசை வரத்தடையில்லை.
இனி வரும் கேள்வி, நித்யஸம்ஸாரியே இல்லை என்றால் ,எல்லீரும் வீடு பெற்றால் ஸ்ருஷ்டிக்கத்தகுந்ததே இல்லாமல் போவதால் எம்பெருனுடைய ஸ்ருஷ்ட்யாதிரூபமான லீலாரஸத்துக்கு தடை வரும். இதை பரிஹரிக்க நித்யஸம்ஸாரி ஒருவனுண்டு என ஸ்வீகரித்தால் அவனுடைய துக்கத்தை ப்போக்கடிக்காததால் எம்பெருமானுடைய ஸர்வபூததயைக்கு- நிருபாதிகதயைக்கு நாசம் வரும் என.
பதில்,எல்லீரும் வீடு பெற்று அதடியாக ஸ்ருஷ்டிக்க வஸ்து இல்லாமல் லீலைக்கு விச்சேதம் வந்தாலும் தவறில்லை, வேறொருவர் பகவானின் விருப்பத்தை தடை செய்தாலே தோஷமாகும். பகவான், தனது விருப்பத்தால் லீலையை முடித்தால் தோஷமில்லை. இச்சையால் ப்ரவ்ருத்திபோல் ஸ்வேச்சையால் நிவ்ருத்தியும் வரலாம். ஆக நித்யஸம்ஸாரியே கிடையாது எனலாம், தவறில்லை.
நித்யஸம்ஸாரி உண்டு என்ற பக்ஷத்திலும் தோஷமில்லை, நித்யஸம்ஸாரியின் துக்கத்தை போக்காததால் பகவானுக்கு நிருபாதிகதயை போகாது, பகவானுக்கு தயையிருந்தும் அந்த ஜீவனுடைய கர்மாவினால் பகவானின் தயை தடைபட்டுள்ளது .ஆக அவன் மோக்ஷம் பெறாததில் தடை அவனது கர்ம, ஆதலால் பகவானுக்கு நிருபாதிகதயை போகாது,
இதை ஸ்வாமி தேசிகன் ஸாதிக்கும் அழகை, தத்வமுக்தாகலாபஹாரத்துடன் ஸ்வாமி தேசிகனின் சித்ர்த்துடன்
நாம் ரஸிக்கலாம்.
நிச்சேஷாத்மாபவர்கே விரதிவிஹரணோ விச்வகர்தா ததா ஸ்யாத்
நித்யம் சேத்கோபி துக்யேத் நிருபதிகதயாஹாநிரஸ்யேதி சேந்ந.
பக்ஷஃபூர்வோ யதி ஸ்யாத் விஹரணவிரதிஃ ஸ்வேச்சயா நைவ தோஷஃ
சிஷ்டே பக்ஷே நிருத்தா நிருபதிகதயா குத்ரசித் நித்யமஸ்து. தத்வமுக்தாகலாபம் ஜீவஸரம்.28
கைசிகமாஹாத்ம்யத்தில் ஸ்ரீபட்டரின் ப்ரயோகம்,
யாவனொருவன் நிஸ்ஸமாப்யதிகனாய்,தேவதாஸார்வபௌமனான ஸ்ரீமந்நாராயணனை,தேவதாந்தரத்துடன் ஸமமாக நினைக்கிறானோ அவனைப்போல் நித்யஸம்ஸாரியாகக்கடவேன் மீளவும் வந்திலேனாகில் என்கிறான் , என.
இதுதான் கடைசியாக நம்பாடுவான் செய்த ப்ரதிக்ஞையாகும், இதைக்கேட்ட ப்ரஹ்மரக்ஷஸ்ஸு அவனை செல்ல அனுமதித்தது என்றால் இந்த தோஷம் எத்தகைக்கொடியது என்பதை நமக்கு உபதேசிப்பது போல் தோன்றும்.
தத்வமுக்தாகலாபஹாரத்துடன் ஸ்வாமி தேசிகன்.

Nithya samsaaris – Those who would be caught in the cycle of births and deaths forever- those who don’t (will not) get moksha (Salvation)

The english translation was provided by Sri U.VeMadhavakannan Swami from article  written by Sri U Ve Satakopa Tatacharya Swami in Chaste Tamil – from an extract from Tattva mukta kalaapam of Swami Desikan.

Objection and answer:

Moksha – salvation or redemption from the eternal cycle of births and deaths- is generally accepted by all schools of Indian philosophy. The pleasures arising out of karma vasanas (karmic diseases)– is associated with pains and suffering as a consequence – and leads to further more vicious cycle of births and deaths – is slowly getting revealed to Jeevathmas over so many ages, births. Jeevathmas get their realization (due to their puNya and karmas) and desire to seek salvation from further births. This desire for moksha would instill them more quest and seek to look for the right and guaranteed means to attain moksha. Saasthras declare unambiguously that those who perform the right means / anushtanam, would be assured of moksha at the end of their births.

Alilai Kannan thirukolam

Question arises here:  There are so many millions of people in this world who are not desirous of moksha. Hence, they might think- would I end up being eternal samsaaris? (Nithya samsaaris..) if he gets such a query in his mind, he would never ever get a desire for moksha at all.

Answer: If there is fruit, even if there is a doubt on attainment of such fruit, i.e. the means, one whould still be desirous of it due to the fruit being there and is being seen or visualized. One can see the same in practical worldly life itself. Take for example- stock market. There is definitely a tremendous doubt and apprehension if there is any surety of potential gain in stock market if one buys stock and trades. However though there is doubt, one enters into it, with a desire to make some quick bucks and hence jumps into the fray.

Further, Jeevathmas take up the means thinking for certain that the means would assure them of moksha.

Even if we declare that there are absolutely NO eternal samsaaris, at least there should be a last person to attain moksha. Perhaps I could be the last one L – and with that presumption, one many not take up or do anything towards attainment of moksha.

Thus- though there could be Nithya samsaari (means eternal baddha jeevathma), there is no objection in having a desire for moksha.

Further question now arises now:

If there is NO nithya samsaari at all (means there is none who would hang around suffering forever- utltimately everyone attains moksha) in this world, then what happens to Bhagawan Sriman Narayanan’s leela vibhUthi, leela rasam? What happens to srushti? And to resolve this, if we say – there is Nithya samsaari, then would perumAL (Bhagawan Sriya: Pathi Sriman Narayanan{ NOT bless him at all, and would not shower His daya for giving an opportunity to perform any means to attain moksha at all? Is He not equal and impartial to all? Is He not Parama dayALu? His unbounded grace would be then questioned.

Answer: Even if everyone attains moksha by getting to know the right means, by being aware of current ills and transitory of pleasures and pains as well as karmic diseases of births and deaths and  getting into the right desire for moksha, there is NO worry to bother about His leelA vibhUthi. If someone else causes hurdle or problem to our Bhagawan’s desire or act, then it is wrong and unpardonable. However, He Himself can negate due to His own choice or desire to close leela vibhUthi and grant moksha to the last person. Thus it is perfectly ok to say there could be NO nithya samsaari possibility.

Alternatively if we say- No.. There is Nithya samsaari possibility- even that is not a wrong statement.. It is not that- Bhagawan’s unbounded grace, DayaLu guNa etc is questionable if someone does not get moksha at all. It is not because of Bhagawan’s KalyaNa guNa, the jeevathma does not get moksha; it is ONLY because of his karma vasana, and because of accrued sins over the ages, he is stuck. It no way violates or contradicts our most compassionate PerumAL’s daya guNA. That doesn’t go away.

This is so beautifully and visually explained with a pictorial representation by unparalleled Peerless Preceptor, Our most merciful Acharya saarva bhouman Vedantacharyan, Swami Desikan in his Tattvamuktha kalaapa as a necklace.

nissEShAthmApavargE virathiviharaNO viswakarthA tatAsyAth

nithyam sEthkOpi dukhyEt nirupadhikadayAhAnirasyEti chEnna:

paksha: pUrvO yatisyAt viharaNavirathi: swEcchayA naiva dhOsha:

sishtE pakshE niruddhA nirupadikadayA kutrachit nityamasthu.

Tattvamuktakapa – Jeevarasam 28

In Kaisika maahathmyam- Sri Parasara Bhattar establishes:

Whoever considers The Only One – Supreme Lord Sriman Narayanan, Chief of devas- as equal to and same as other demi gods, like him- Let me also be born as Nithya Samsaari always – says Nampaaduvaan at the end taking a vow. When Brahmaraakshas heard this, he felt so pleased and let Nam paaduvaan go. One can visualize and imagine, how cruel and torturous is this thought of considering Sriman Narayanan – the Only One- OtthAr mikkAr ilaiyaaya maa maayan- One for whom there is none equal to – why to talk of Superiority?- and that would lead us into the state of eternal births and deaths – and Nithya samsaari status. Can we afford to go down that path?

Tamil Writeup : Sri U Ve Satakopa Tatacharya

Translation : Sri U.Ve Madhavakannan

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here