Thirukkannamangai Sri Bakthavathsala Perumal Temple Chithirai Brahmothsavam: Vidayatri Utsavam

0
964 views

Sri Bhakthavatsala Perumal Pushpa PallakkuAs a part of ongoing Chitirai Brahmotsavam at Sri Bakthavatsala Perumal Temple at Thirukkannamangai, On May 16th 2014, is the Vidayatri Utsavam of Brahmotsavam at Thirukannamangai   In the morning Sridevi, Bhoodevi, Sri Andal Sametha Sri Bhakthavatsala Perumal had vishesha Thirumanjanam. Later  in the evening  around 8.00 P.M  Sri Bhakthavatsala Perumal in Vishesha Pushpa Alankaram goes for Thiruveedhi Purappadu in Pushpapallaku.Lot of Astikas took part in Vidayatri Utsavam and had the blessings of Sri Bhakthavatsala Perumal.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரமான திருக்கண்ணமங்கையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு நடந்து வரும் சித்திரை ப்ரும்மோத்ஸவத்தில், இன்று ஸ்ரீ ஜய வருஷம் வைகாசி மாதம் 2ந் தேதி வெள்ளிக்கிழமை “ விடையாற்றி உத்ஸவத்தை” முன்னிட்டு காலை 11 மணிக்கு ஸ்ரீ தேவி பூமி தேவி, ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது.

இரவு 8 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் விசேஷ புஷ்ப அலங்காரத்தில், புஷ்பப் பல்லக்கில் திருவீதி புறப்பாடு கண்டருளினார்.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து அருளைப் பெற்றனர். ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளின் சித்திரை ப்ரும்மோத்ஸவம் இனிதே முடிவுற்றது.

These are some of the photos taken during the occasion..

Thirukannamangai Sri Bhakthavatsala Utsavam Vidayatri Utsavam 2014--00 Thirukannamangai Sri Bhakthavatsala Utsavam Vidayatri Utsavam 2014--01 Thirukannamangai Sri Bhakthavatsala Utsavam Vidayatri Utsavam 2014--02 Thirukannamangai Sri Bhakthavatsala Utsavam Vidayatri Utsavam 2014--03 Thirukannamangai Sri Bhakthavatsala Utsavam Vidayatri Utsavam 2014--04 Thirukannamangai Sri Bhakthavatsala Utsavam Vidayatri Utsavam 2014--05 Thirukannamangai Sri Bhakthavatsala Utsavam Vidayatri Utsavam 2014--06

Writeup & Photography : Sri Rajagopalan TSR

Pasurams of Thirukannamangai

பெரும்புறக்கடலை அடலேற்றினைப்*

பெண்ணை யானை* எண்ணில் முனிவர்க்கருள்                                       

 தருந்தவத்தை முத்தின் திரட்கோவையை* பத்தராவியை நித்திலத் 

தொத்தினை* அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை* 

அமுதம் பொதியின் சுவைக் கரும்பினை* 

கனியைச் சென்று நாடிக்* 

கண்ணமங்கையுட் கண்டு கொண்டேனே*

 

மெய்ந்நலத்  தவத்தைத் திவத்தைத் தரும்*

மெய்யைப் பொய்யினைக் கையில் ஓர்’சங்குடை*

மைந்நிறக்கடலைக் கடல் வண்ணனை* மாலை-

ஆலிலைப்  பள்ளி கொள் மாயனை*

நென்னலைப் பகலை இற்றை நாளினை*

நாளயாய் வரும் திங்களை ஆண்டினை*

கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக்*

கண்ண மங்கையுட் கண்டு கொண்டேனே*.

 

எங்களுக்கு அருள்  செய்கின்ற ஈசனை*

           வாசவார் குழலாள் மலைமங்கை தன்-

பங்கனை* பங்கில் வைத்து உகந்தான் தன்னை*

           பான்மையைப் பனிமா மதியம் தவழ்*

மங்குலைச் சுடரை வடமாமலை-

           உச்சியை* நச்சி நாம் வணங்கப்படும்-

கங்குலை* பகலைச் சென்று நாடிக்*

           கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*.

 

பேய்முலைத்தலை நஞ்சுண்ட பிள்ளையைத்*

     தெள்ளியார் வணங்கப்படும் தேவனை*

மாயனை மதிள் கோவலிடைகழி மைந்தனை*

     அன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை*

இலங்கும் சுடர்ச் சோதியை*

     எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை*

காசினை மணியைச் சென்று நாடில்*

     கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே

 

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை*

இம்மையை மறுமைக்கு மருந்தினை*

ஆற்றலை அண்ட்த்து அப்புறத்து உய்த்திடும் ஐயனைக்*

கையிலாழி ஒன்றேந்திய கூற்றினை*

குரு மாமணிக் குன்றினை*

நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை*

காற்றினைப் புனலைச் சென்று நாடிக்*

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே

 

துப்பனைத் துரங்கம் படச்சீறிய தோன்றலை*

     சுடர் வான் கலன் பெய்த்து ஓர் செப்பினை*

திருமங்கை மணாளனைத்*

     தேவனைத் திகழும் பவளத்தொளி ஒப்பனை*

உலகேழினை ஊழியை*

     ஆழியேந்திய கையனை அந்தணர் கற்பினை*

கழுநீர் மலரும் வயல்*

     கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*

 

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத்*

தேவதேவனை மூவரில் முன்னிய விருத்தனை*

விளங்கும் சுடர்ச் சோதியை*

விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய அருத்தனை*

அரியைப் பரிகூறிய அப்பனை*

அப்பிலார் அழலாய் நின்ற கருத்தனை*

களி வண்டறையும் பொழில்*

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே.*

 

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக்*

கன்று வீசிய ஈசனை* பேய்மகள் –

துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத்*

தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய-

நஞ்சினை* அமுதத்தினை நாதனை*

நச்சுவார் உச்சிமோல் நிற்கும் நம்பியை*

கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சினைக்*

கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே*

 

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப்*

     பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற-

விண்ணினை* விளங்கும் சுடர்ச் சோதியை*

     வேள்வியை விள்க்கினொளி தன்னை*

மண்ணினை மலையை அலை நீனை*

     மாலை மாமதியை மறையோர் தங்கள்-

கண்ணினை* கண்கள் ஆரளவும் நின்று-

     கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*

 

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று*

காதலால் கலி கன்றி உரைசெய்த*

வண்ண ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றிவை*

வல்லராய் உரைப்பார் மதியம் தவழ்*

விண்ணில் விண்ணவராய் மகிழ் வெய்துவர்*

மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றேந்திய-

கண்ணா!* நின் தனக்கும் குறிப்பாகில்-

கற்கலாம்* கவியின் பொருள் தானே*

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here