ThiruthTher Samprokshanam and Ratha Aarohana Purappaadu for Thiruevvul Sri Veera Raghavan

0
660 views

முனிவன் மூர்த்தி மூவராகி வேதம்
விரித்துரைத்த புனிதன் பூவை வண்ணன்
அண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன் தணியன்
சேயன் தானொருவனாகிலும் தன்னடியார்க்கினியன் எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே – திருமங்கையாழ்வார்

ஸ்ரிய: பதியாய் ஸர்வலோக சரண்யனாய் அவாப்த ஸமஸ்த காமனாய் அகடிதகடினா ஸாமர்த்யமுடையவனாய் ஸர்வ ஸ்வாமியாய் ஸர்வ சேஷியாய் ஆஸ்ரித வாத்ஸல்யனாய் எழுந்தருளியிருக்கிறவனும்

‘ஏலநாறும் பைம்புறவில் எவ்வுள்கிடந்தானே’ என்றும்

‘தேவர்க்கெல்லாம் மூத்த நம்பி முக்கணம்பி முனிவர் தொழுதேத்தும் நம்பி எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே’ என்றும்

‘வேதம் விரித்துரைத்த புனிதன்’ என்றும் ‘விண்ணவர்கோன், தணியன் சேயன் தானொருவனாகிலும் தன்னடியார்க்கினியன்’ என்றும்

‘அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாய் அமைந்த இந்திரற்கும் தம்பெருமான்’ என்றும் வையமெலாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும் மங்கையர்கோனாலே பலபடிகளால் அநுபவித்து மங்களாசாஸனம் செய்யப்பட்டவனும் வீக்ஷாரண்ய வனம் என்றும் புண்யாவர்த்த க்ஷேத்ரம் என்றும் கிங்க்ருஹபுரி என்றும் திருவெவ்வுள் என்றும் தொண்டை நாட்டு திவ்யதேசங்களிலே ஒன்றானதும் ஹ்ருத்தாப நாசினி தீர்த்தத்தின் வடகரையிலே அமைந்துள்ளதும் ப்ரஸித்தமானதுமான திருவள்ளூரிலே ஸர்வலோக ரக்ஷகார்த்தமாக எழுந்தருளியிருப்பவனான

ஸ்ரீ கனகவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ வீரராகவனுக்கு நூதன திருத்தேர் செய்யப்பெற்று, இப்பவும் நாளது விஜய வருஷம் வைசாக மாஸம் 16 ஆம் தேதி (30/05/2013) வியாழக்கிழமை ஸ்ரவண நக்ஷத்ரம் கூடிய சுபதினத்தில் ரிஷப லக்னத்தில் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் நூதன திருத்தேருக்கு ஸம்ப்ரோக்ஷணமும் காலை 7.40 மணி முதல் 8.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் ‘ரத ஆரோஹண புறப்பாடும்’ காலை 9 மணிக்குத் திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெற இருப்பதாலும் மாலை 6 மணிக்கு ஸ்ரீ வீரராகவன் உபயநாச்சியாருடன் பத்தி உலாத்தல் நிகழ்ச்சியும் (காணக் கண்கள் கோடி வேண்டும்படியான கண்கொள்ளாத அழகுடைய நிகழ்ச்சி) முதலியவைகளும் நடைபெற இருப்பதால் பக்தர்கள் எழுந்தருளியிருந்து அனுப்பவிக்கும்படி ப்ரார்த்திக்கிறோம்.

Courtesy:Sri Aasuri LakshmiNarasimhan Swami

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here