அறிவோம் சற்றே தர்ம சாஸ்திரம் (let’s learn Dharmasastram) – 10

1
1,979 views

Please note these are originally posted by Thiru Murali Battar who is Archakar @ Srirangam Temple. English translation by Srimathi Saranya.

புஷ்ப்பிக்காத நாணலுக்கு தர்ப்பம் என்று பெயர். இதில் நுனியுள்ள இரண்டு தர்ப்பங்களை பிரதக்ஷிணமாக முறுக்கி மத்தியில் மடித்து அடிநுனிகளை ஒன்றாக சேர்த்து, ப்ரணவமந்திரம் கூறி, முடியவேண்டும். அவ்விதம் முடிந்த பவித்திரத்தின் நுனி 4 அங்குல நீளமும், முடிச்சு ஒரு அங்குலமும், வளையல் இரண்டு அங்குலமும் இருக்க வேண்டும். இந்த இரண்டு தர்ப்பங்களும் நீளமும் பருமனும் சமமானதாகயிருக்க வேண்டும்.

தேவ கார்யத்தில் இரண்டு பில் பவித்ரமும், பித்ரு காரியத்தில் ஒன்று அல்லது மூன்று பில் பவித்ரமும் உபயோகிக்க வேண்டியது.

ஜபம், ஹோமம், தானம், வேதாத்யயனம், பித்ரு தர்ப்பணம் முதலான கர்மாக்களில் இந்த பவித்ரத்தையோ அல்லது பொன் அல்லது வெள்ளி மோதிரத்தினையோ அணியவேண்டும். தர்ப்பபவித்ரம் தரிப்பதானால் பவித்ரவிரலின் மூலத்தில் தரிக்கவேண்டும்.

தர்ப்ப பவித்ரத்தினை கையிலிருந்து தரித்தப்பிறகு எடுக்கவேண்டி வந்தால் வலதுகாதில் தரிக்கவேண்டும். வேறெங்கும் வைக்கக்கூடாது.

ஹோம த்ரவயங்களுக்கு ஆசனத்திறக்காக அடியில் மூன்று தர்ப்பங்களும், மூடுவதற்கு மூன்று தர்ப்பங்களும் பயன்படுத்த வேண்டும்.

பர்யக்னிகரணத்திற்கு (கொளுத்துவதற்கு) ஒரேயொரு தர்ப்பம்தான் உபயோகிக்க வேண்டும்.

கோடு கிழிப்பதற்கு (உல்லேகனம்) இரண்டு தர்ப்பம் உபயோகிக்க வேண்டும்.

பரிஸ்தரணமாக அக்னியைச் சுற்றி நான்கு புறத்திலும் 16 தர்ப்பங்களும், பிரும்ம சம்பந்தமான கார்யங்களில் 28 தர்ப்பங்களும் உபயோகிக்கவேண்டும்

மேலும் காண்போம்…

Day without flowers is called dharbam.In this fold the both edges of dharbam & folding it in clockwise should tie in middle,chanting pranava mantram should tie
Such a pavithram’s edge should be 4 angulam in length & the knot should be one angulam,the round should be 2 angulam.this 2 dharbam should have same length & width

For Lord related work should use 2 pavitharam ,Pitru work should use one or 3 pavitrams

during Japam,Homamam,Dhanam,vedaithayam,pitru tharpanam one should wear pavitram or wear Gold or silver ring.Thar pavithram with darbham.

After wearing Dharba pavithram if one needs to remove it then should place it in right ear only and not anywhere else.

For homam etc.., for seat should place 3 dharbangal below ,and for closing should use 3 dharbams

For pragna karyam should use all the dharbams

to draw line two Dharbhams should be used

around the paristhanam 16 dharbams,for Bramha related work 28 dharbams should be used

to be contd..!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here