Upanyasam Titbits – 2

0
929 views

திருக்குறுங்குடி பெருமாள் வடுக நம்பி, உடையவரை கேட்டாராம் தனக்கு “அஷ்டாக்ஷரம்” சாதிக்கும்படி. சிஷ்யன் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி வந்தால் தனக்கு சம்மதம் என்றாராம். ஒரு சிம்ஹாசனம் கொண்டு வரப்பட்டது. உடையவர் நின்று கொண்டு “அஷ்டாக்ஷரம்” சொல்வது போல் இன்றும் பார்க்கலாம். ஆனால் தனது ஆச்சர்யனை மனதில் நினைத்துக் கொண்டு இருந்தார் என்பது ஐய்திக்கியம்.

ஆழ்வார் திருநகரியில் சடாரி சாதியிங்கோள் என்று கூறுவது இல்லை, ஸ்ரீராமானுஜர் சாதித்தருளுங்கோள் என்றே கேட்பார்.

உடையவர் ஆசார்யன் ஐவர் பெரிய நம்பி, திருகோட்டியூர் நம்பி, திருமலை நம்பி, திருவரங்கம் பெருமாள் அரையர், திருமலை ஆண்டான் (மாலாதரர்)

உடையவர் ஒரு தீர்கதரிசி. எல்லோராலும் முடியும் என்பதால் அவர் ஆறு கட்டளைகள் கூறுவார். எப்படி மேலிருந்து கீழே இறங்கி வந்து இருக்கிறார்.

1) ஸ்ரீ பாஷ்யத்தை வாசிப்பதும், வாசிப்பித்தும் செய்தல். (இது எல்லோராலும் முடியாது) திவ்யப் ப்ரபந்தம் ஓதியும் ஒதுவித்தும் செய்தல் (ஒரு சிலரால் முடியும்)

2) திவ்ய தேசங்களில் அமுதுபடி,சாத்துப்படி நடத்தி வருவது (ஒரு சிலரால் முடியும்)

3) திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாகிலும் கட்டிக் கொண்டு இருப்பது. (ஒரு சிலரால் முடியம்)

4) த்வயத்தை அர்த்தத்தோடு அனுசந்திப்பது. (எல்லோராலும் முடியாது)

5) கடைசியாக மேலே கூறிய எதுவும் முடியாவிட்டால் ஒரு பாகவதம் அபிமானத்தில் ஒதுங்கி இருத்தல். அதுவே அவனுக்கு உகக்கும். (இது எல்லோராலும் முடியும்)

ஆகையால் பல நூற்றாண்டுகள் உடையவர் நம் பக்கம் இருக்கவேண்டும் என்று நாம் ஆசைப் பட்டால் அது தவறு ஆகாது. மேலே கூறிய ஒரு சில கட்டளைகள் படித்தவர்களோ அல்லது பணக்காரர்களோ செய்ய முடியும். கடைசி கட்டளை எல்லோராலும் முடியும். அதுவே பெருமானுக்கும் உகப்பு. அதை நான் கூறவில்லை.

நீங்களே உணர்வீர்கள். திருமங்கை மன்னன் தனது ஏழை ஏதலன் பதிகத்தில் கூறி இருப்பதை படித்தால்.

“ஏழை எதலன் கீழ் மகன் ஏன்னாதிரங்கி மற்றவர்க் கின்னருள் சுரந்து
மாழை மான்மட நோக்கியுன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக் கிங்கொழி என்ற சொற்கள் வந்தடியேன் மனத் திருந்திட
ஆழிவண்ணா நின் அடியினை அடைந்தேன் அணிபொழில் திரு வரங்கத்தம்மானே”

Courtesy: Nochalur Sri Seshadri Sampath Swami

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here