Arul Varadhar at Anaikatti street with Veda Parayana Adyabaga Ghosti

1
842 views

வேதபாராயணமும் ஸ்ரீவேதாந்ததேசிகனும்

ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரரான ஸ்ரீநயனாராசார்யர் ஸ்வாமி, ஸ்ரீமத்வேதாந்த்தேசிகப்ரபத்தி எனும் ஸ்வாமி தேசிகன் விஷயமான ஸ்தோத்ரத்தில்

வித்வேஷமானமதமத்ஸரவித்விஷௌ யௌ
விஷ்ண்வாலயானுகமநோத்தமநித்யக்ருத்யௌ.
வேதாந்தவ்ருத்தவிஹிதாஞ்ஜலிகோசரௌ தௌ
வேதாந்தஸூரிசரணௌ சரணம் ப்ரபத்யே,

எம்பெருமானை மங்களாசாஸனம் செய்ய திருக்கோயிலுக்கு செல்வது என்பதான உத்தமமானகார்யத்தை நித்யகர்தவ்யமாக கொண்ட தேசிகனின் திருவடிகளை சரணமடைகிறேன், என்று ஸாதிப்பதால் விவபவத்தில் ஸ்வாமி தேசிகன் ப்ரதிதினம் எம்பெருமானை மங்களாசாஸனம் செய்தார் என்பதாகிறது. மேல் ச்லோகத்தில்

வீதீஷு ரங்கநகரே க்ருதசங்க்ரமௌ தௌ
விஷ்ணூத்ஸவேஷு விதிவாஸவஸேவிதேஷு .
வித்யாவிநீதஜநதாவிஹிதாநுஸாரௌ
வேதாந்தஸூரிசரணௌ சரணம் ப்ரபத்யே

ப்ரம்ஹா இந்த்ரன் முதலான தேவதைகளால் ஸேவிக்கப்பட்ட எம்பெருமானின் உத்ஸவகாலங்களில் ஸ்ரீரங்கத்தில் திருவீதிகளில் நடந்து சென்ற ஸ்வாமி தேசிகனின் திருவடிகளை சரணமடைகிறேன் என.இங்கு ஸ்ரீரங்கத்தில் என ஸாதித்தது உபலக்ஷணம். திவ்யதேசங்களில் என பொதுவாக கொள்ளலாம்.(“விஷ்ண்வாலயாநுகமநோத்தமநித்யக்ருத்யௌ”-விஷ்ண்வாலயங்களில் நடைபெறும் உத்ஸவத்தில் அனுகமந- அனுயாத்ரையையாக உத்தமமான வேதபாராயணம் செய்வதை நிரந்தரம் கர்தவ்யமாக கொண்டதிருவடிகள் என்றும் ஸ்வீகரிக்கலாம்,) ஆக ஸ்ரீபேரருளாளனின் உத்ஸவகாலங்களில் ஸ்வாமி, வேதபாராயணாதி கோஷ்டிகளில் அன்வயித்திருப்பதையும் இங்கு ஸாதித்தபடி எனலாம். இதை ஸேவிக்க நாம் ஸ்வாமியின் விபவகாலத்தில் பிறந்திருக்கவில்லை. இன்று அந்த பாக்யத்தை காஞ்சியில் நம்மத்திகிரித்திருமால் உதஸவகாலங்களில் பெறுகிறோம் (ஸேவிக்கலாம்.) ஆம் ஸ்வாமி தேசிகன் “துரகவிஹகராஜஸ்யந்தனாந்தோளிகாதிஷு,” “ஆனைபரிதேரின்மேல் அழகர் வந்தார் “என கொண்டாடிய வைசாகோத்ஸவத்தில், கருடஸேவை, நாச்சியார் திருக்கோலம் முதலிய தினங்களில்,
“பணிபதிசயநீயாதுத்திதஸ்தவம் ப்ரபாதே” என அனுபவித்தபடி பர்யங்கத்தில் நின்றும் நேராக ஸ்ரீஸ்வாமிக்கு ஸேவைஸாதிக்கும் சித்ராபௌர்ணமீதினம் ப்ரபாதகாலத்திலும் ஸ்ரீபேரருளாளனின் வேதபாராயணத்தில் ஸ்வாமியும் அன்வயிக்கும்படி க்ஷெ பாராயணம் ஸ்ரீதூப்புலில் நடைபெறுகிறது.
பஞ்சபர்வகாலத்தில் மற்றும் சுக்ரவார புறப்பாடுகளில் ஸ்வாமியும் அன்வயிக்க கோயிலில் ஸ்ரீதேசிகன் ஸந்நிதி வாசலில் பாராயணம் நடைபெறுகிறது.

“யத்ர யத்ர ரகுநாதகீர்தநம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம்” என்பது போல் காஞ்சியில் ஸ்வாமி தேசிகன் எழுந்தருளியிருக்கும் இடமெல்லாம் தான் எழுந்தருளி அவருக்கு ஸ்ரீசடாரி ப்ரஸாதிப்பதை ப்ரதான வ்ரதமாக கொண்ட நம்மத்திகிரித்திருமால்,காஞ்சியில் ஸ்ரீரங்கராஜவீதியில், ஸ்ரீதிருப்புட்குழி ஸ்வாமி ஆச்ரமத்தில் ஸேவைஸாதிக்கும் ஸ்வாமி தேசிகனை அனுக்ரஹிக்க சீவரோத்ஸவம் திரும்புகாலில் எழுந்தருள்கிறார்.பெருமாள் வழியில் மண்டகப்படி கண்டருளி ஸ்வாமி ஸந்நிதி வாசலுக்கு எழுந்தருள்வது வரையில் ஸ்வாமி தேசிகனும் அன்வயிக்க ஸ்வாமி தேசிகன் ஸந்நிதியில் பெருமாளின் வேதபாராயணம் நடைபெறுகிறது. இம்மாதிரி மற்ற ஆழ்வார் ஆசார்யர்கள் ஸந்நிதியில் நடைபெறுவதில்லை. இந்த க்ரமத்தில் இவ்வருடம் சீவரோத்ஸவம் திரும்புகாலில் ஸ்ரீரங்கராஜவீதியில் ஸ்வாமி தேசிகன் ஸந்நிதியில் 4ஆம் காண்டத்தில் 4ஆம் ப்ரச்னம், மற்றும் நமகம், 6ஆம் ப்ரச்னத்தில் ஸ்வஸ்திவாசனத்தில் “அப்ரதிரதம்” எனப்படும் முதல் அனுவாகம் வரையில் பாராயணம் செய்யும் ஸமயத்தில் தாஸனுக்கு தோன்றியது பெருமாள் பாராயணம், இவ்விடத்தில் நடைபெறுவதில் காரணம் என்னவாக இருக்கும் என, பிறகு ஸ்ரீகுமாரவரதாசார்யரின் ஸ்ரீஸூக்தி ஞாபகம் வந்த்து, இதை வைத்தே பெரியோர்கள் இம்மாதிரியான க்ரமத்தை வகுத்தார்களோ என நினைத்தேன், “வீதீஷு ரங்கநகரே க்ருதசங்க்ரமௌ தௌ விஷ்ணூத்ஸவேஷு விதிவாஸவஸேவிதேஷு “ என்றுள்ளதை “வீத்யாம் ச ரங்கந்ருபதேஃ” –ஸ்ரீரங்கராஜவீதியில் க்ருதசங்க்ரமௌ தௌ என மாற்றினால் சந்தோபங்கம் வாராது, ஸ்வாரஸ்யமும் இருக்குமென ஆஸ்வதித்தேன்..ஸஹ்ருதயர்களும் இதை ஆஸ்வதிக்கவேணுமென நிச்சயித்து இதை எழுத ஸ்மரித்த ஸமயத்தில் உத்ஸவ வீடியோவை ஸ்ரீமான் ச்ரேயஸ் ஸ்வமி அனுப்பி வைக்க, எம்பெருமானும் இதை ஆமோதித்ததாக நினைத்தேன்.

Courtesy: Sri Thiruevvul nandapathangi Swami

Print Friendly, PDF & Email

1 COMMENT

  1. “யத்ர யத்ர ரகுநாதகீர்தநம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம்” என்பது போல் காஞ்சியில் ஸ்வாமி தேசிகன் எழுந்தருளியிருக்கும் இடமெல்லாம் தான் எழுந்தருளி அவருக்கு ஸ்ரீசடாரி ப்ரஸாதிப்பதை ப்ரதான வ்ரதமாக கொண்ட நம்மத்திகிரித்திருமால்,காஞ்சியில் ஸ்ரீரங்கராஜவீதியில், ஸ்ரீதிருப்புட்குழி ஸ்வாமி
    well,fixed vedieo clip in front of srirangarajaveedi sri desikan sannidhi.who wrote this article?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here