ஸ்ரீதேவாதிராஜனின் திருவாராதனமும் யாகமும்

0
1,227 views

This article is written by Sri.U.Ve. Dr.Satagopa Thathacharyar Swamy of Kanchi.

ஸ்ரீதேவாதிராஜனின் திருவாராதனமும் யாகமும்

யாகம் என்ற சொல்  “யஜ தேவபூஜாயாம்”என்ற தாதுவிலிருந்து வந்தது, யாகம் என்றால்  தேவதாராதனம் என்பதாகும், அது அக்நியில் ஹோமம் செய்வது மாத்ரமல்லாமல் பெருமாளுக்கு திருவாராதனம் செய்வது ச்ரௌத ஸ்மார்த்த கர்மாக்களை செய்வதும் ஆகும், யாகம் தேவதாராதநம்தான், இதையே ஸ்ரீபாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் ஸ்ரீபாஷ்யத்தில்

“யஜ தேவபூஜாயம் இதி தேவதாராதனபூத யாகாத்யாராத்யபூத அக்னி வாயு “என்கிறார், “ததோ யாகமாரபேத” என்று நித்யக்ரந்தத்திலும் காணலாம். யாகத்தில் அக்னி வாயு முதலான தேவதாராதனமும் எம்பெருமானையே சென்றடைகிறது எம்பேருமானே  எல்லா பலத்தையும் கொடுப்பதாக பகவத்கீதையில் “அஹம் ஹி ஸர்வயஞ்ஞாநாம் போக்தாச ப்ரபுரேவ ச “என்பதாக காண்கிறோம், ப்ரபு ஃ என்றால்  பலத்தை கொடுப்பவன் என ஸ்ரீபாஷ்யகாரர் உறையிட்டுள்ளார்.  மேலும் “யாகதான ஹோமாத்மகானி  ஸ்துதி நமஸ்கார கீர்த்தன அர்சன த்யாநாநி  ச ததாராதநாநி,” என  யாகம், தாநம்,  ஹோமம்   மற்றும் ஸ்துதி நமஸ்காரம் கீர்த்தநம் அர்ச்சித்தல் த்யானம் எல்லாம்  ஆராதநங்கள், இவைகளைல் ஆராதிக்கப்பட்ட பகவானிடமிருந்து ஐஹிகபலம் மற்றும் மோக்ஷபலத்தை பெருகிறான் என்பதாக சாஸ்த்ரம், ஆக யாகமும்  திருவாராதனமும் ஒன்றுதான் என்பது நிச்சயம், இதை  நாம் சிறிது அனுபவிப்போம்,  முதலில் இரண்டையும் அறியவேணும் பிறகே இரண்டும் ஒன்று என அனுபவிக்கமுடியும்,

யாகத்தில் யஜமானன் ருத்விக்குகள் என உள்ளனர் ருத்விக்குகளில் ப்ரஹ்மா ஹோதா அத்வர்யு உத்காதா என நான்கு பிரிவு உள்ளது ஒவ்வொரு பிரிவிலும் நால்வர் வீதம் மொத்தம் 16 ருத்விக்குகள்,

அவர்களில் 1,ப்ரஹ்மாவானவர் யாகம் சரியாக நடைபெறுகிறதா என  மேற்பார்வையிடுபவர், ஸந்தேஹம்  வந்தால் அதை போக்கடிப்பவர்,  2,அத்வர்யு  “அத்வரம் யுநக்தி”  அத்வரமான யாகத்தை நடத்துபவர்,மேல் செய்யவேண்டியதை தெரிவித்து நடத்துபவர், அநேகமாக ஹோமம் செய்பவரும் அவரேயாவார்.

3, ஹோதா, ருக்குகளை சஸ்த்ரத்தை சொல்பவர்,

4. உத்காதா, கானம் செய்யும் காலத்தில் ஸாமகானம் செய்பவர்.

ப்ரஹ்மா ஹோதா அத்வர்யு அக்னீத் முக்யமானவர்கள், அத்வர்யுவானவர் ஹோமம் செய்யவேண்டிய வஸ்துவை கையில் கொண்டு “ஆச்ராவய”-கேட்ப்பிக்கச்செய் என்பார், அக்னீத்- ஆக்னீத்ரன் “அஸ்து ச்ரௌஷட்”
என்பார், மீண்டும் அத்வர்யு  “யஜ “–யாஜ்யாம் பட-தேவதைக்கான மந்த்ரத்தை  சொல்லு என்பார், உடன் ஹோதா “யே யஜாமஹே” என துடங்கி மந்த்ரத்தை சொல்லி “வௌஷட்” என முடித்தவுடன் அத்வர்யு ஹோமவஸ்துவை அக்நியில் ஹோமம் செய்வார், யஜமானன்  “இதம் ந மம “என உத்தேச்யத்யாகம் செய்வார், பிறகு ஹோமம் செய்த வஸ்துவியின் மீதியை  எடுத்து சென்று “ஹோதுஃ ப்ரதம பக்ஷஃ” என்கிற சாஸ்த்ர வசனப்படி ஹோதாவிடம் முதலில் சிறிது கொடுத்து மற்றவர்களுக்கும் பிறகு கொடுப்பார் அத்வர்யு, இதையே முதல்காண்டத்தில் 6வது ப்ரச்னத்தில்  காணலாம்,  “யோ வை ஸப்ததசம் ப்ரஜாபதிம் யஞ்ஞமன்வாயத்தம் வேத” என,

யாவனொருவன் 17 என்பதோடு ஸம்பந்தமுடய ப்ரஜாபதியை யஞ்ஞத்தை அறிகிறானோ அவன் யஞ்ஞத்தோடு நிலைத்து நிற்கிறான். ப்ரஜாபதிக்கு 17 உடன் என்ன ஸம்பந்தம் என்பதை விளக்கும்  வாக்யம் வருமாரு- “ஆச்ராவயேதி சதுரக்ஷரம்- ஆச்ராவய- आश्रावय-  अस्तु श्रौषट् इति चतुरक्षरं- यजेति द्व्यक्षरं ये यजामहे इति पञ्चाक्षरं द्व्यक्षरो वषट्कारः एष वै सप्तदशः प्रजापतिः,”  ஆச்ராவய  என 4 எழுத்து,அஸ்து ச்ரௌஷட்   என 4 எழுத்து, யஜ என 2எழுத்து, யே யஜாமஹே  என 5 எழுத்து வௌஷட் என 2 எழுத்து ஆக 17. இதுதான் 17 எனகிற ப்ரஜாபதி,  இதை எவன் அறிகிறானோ அவன் யஞ்ஞத்தோடு நிலைத்து நிற்க்கிறான், யஞ்ஞத்திலிருந்து  விடுபடுவதில்லை என அறிபவனுக்கே பயனை கூறுகிறாள் வேதமாதா,

மேலும்  இப்படிப்பட்ட ப்ரஜாபதியை எந்த ஒருவன் அறிகிறானோ, சந்தஸ்யமான 17 அக்ஷரமான ப்ரஜாபதியை அறிபவன் புண்யனாகிறான், य एवं वेद पुण्यो भवति,  புண்யத்துடன் கூடியவனாகிறான் என,

இனி திருவாராதநத்தை காண்போம்

ஸ்ரீவரதன் ஸந்நிதியில் திருவாரதனத்தில் யஜமானன் உபயம் செய்பவர் மற்றும் பொதுவான ஆஸ்திகர்கள், பலன் அவர்களுக்குத்தான்.

1, ப்ரஹ்மா ஸ்தாநத்தில்  தர்மகர்தாவின் ப்ரதிநிதியாக மணியம் கைங்கர்யம் செய்பவர்,  அவரவர் கைங்கர்யத்தை சரியாக செய்கிறார்களா என பார்த்துவருகிறார்,

2, அத்வர்யு ஸ்தாநத்தில் அர்ச்சகர்கள் ஹோமவஸ்துக்களான  தீர்த்த புஷ்ப,ப்ரசாதங்களை அக்னிஸ்தானமான எம்பெருமானிடத்தில் ஸமர்ப்பிக்கிறார்கள்,

3, தாதாசார்யர்கள் ஹோதாவின் ஸ்தாநத்தில் வேதவிண்ணப்பம் செய்பவர்கள், 4,உத்காத்ரு ஸ்தாநத்தில் திவ்யப்ரபந்தம் ஸேவிப்பவர்கள்  ஸாமகானம் செய்யும் ஸ்தாநத்தில்  அருளிச்செயலை ராகத்துடன் அனுஸந்திக்கிறார்கள்.

ஸ்ரீதேவாதிராஜன் திருவாராதனத்தில்  அத்வர்யுவான அர்ச்சகர்கள் ஆச்ராவய என்று சொல்கிற க்ரமத்தில்   அலங்காரஸனத்தில் பெருமாளுக்கு  தீபம் ஸமர்பிக்கும் ஸமயத்தில்  யாகத்தில் ஆக்னீத்ரன் அஸ்து ச்ரௌஷட் என சொல்லும் க்ரமத்தில் கட்டியக்காரர் ஜயவிஜயீ பவ என கட்டியம் கூற, யாகத்தில் அத்வர்யு யஜ சொல்லும் க்ரமத்தில்  அர்ச்சகர் ஸ்ரீசடாரிக்கு உபசாரம் ஸமர்ப்பிக்கும் காலத்தில் கட்டியக்காரர் அத்வர்யுக்கு வேண்டி  யஜ என்கிற ஸ்தாநத்தில் அருளப்பாடு வேதவிண்ணப்பம் செய்வார்கள் என அருளப்பாடிட யாகத்தில் ஹோதா  யே யஜாமஹே  என்று துடங்கி சஸ்த்ரம் கூறும் க்ரமத்தில் இங்கு தாதாசார்யர்கள் நாயிந்தே நாயிந்தே  என உபக்ரமித்து வேதவிண்ணப்பம் செய்து ஜபித்த திருத்தழாயை பரிசாரகர் மூலமாக அர்ச்சகரிடம் கொடுத்தவுடன் அதை  அக்னிஸ்தாநமான எம்பெருமான் திருவடியில் அவர் சேர்ப்பார், பிறகு நிவேதனம் முடிந்து ஸ்ரீசடாரி  ஹுதசிஷ்டமான திருத்துழாய் ப்ரசாதத்தை   யாகத்தில் அத்வர்யு முதலில்  ஹோதாவுக்கு கொடுக்கும் க்ரமத்தில் இங்கு அர்ச்சகர் தாதாசார்யர்களுக்கு முதலில்  கொடுத்து பிறகு மற்றவர்களுக்கும் கொடுப்பதாக  அமைந்ததை கண்டால் ஸ்ரீபாஷயகாரர் ஸாதித்தபடி  இங்கு நடைபெறும் திருவாரதநத்துக்கும்  யாகத்துக்கும்  பேதமில்லை என்பது தெரியும்,  இப்படியாக  ஸப்ததச ப்ரஜாபதியை நாம் அறிந்தபடியால் ப்ரதி யஞ்ஞேந திஷ்டதி ந யஞ்ஞாத் ப்ரம்சதே  என்கிற க்ரமத்தில் யஞ்ஞத்தில் அவதரித்த  நம்மத்திகிரித்திருமாலின்  யஞ்ஞமாகிற திருவாராதனத்தில்  நின்று என்றென்றும் நம்மை விடுபடாதிருக்கச்செய்து வேததத்தில்  கூறியதை ஸத்யமாகச்செய்யவேணும் ஸத்யவ்ரதக்ஷேத்ரவாஸியான அருமறையை காத்தவர் என ப்ரார்த்திப்போம்,

முன்பு ஒருஸமயம் புண்டரீகாக்ஷயஜ்வாவின் பௌத்ரராய் “புண்டரீகாக்ஷஸோமஸுத்ஸம்பவஸ்ய அநந்தகுணஸேவதேஃ அநந்தஸூரேராத்மஸம்பவஃ “என ஸோமயாகம் செய்தவரின் பேரனென தன்னை பெருமையாக கூறிக்கொள்ளும் ஸ்வாமி தேசிகன் ஸந்நிதியில் முதல்காண்டம் 6வது ப்ரச்நம் பாராயணம் செய்யும் காலத்தில் இந்த அனுவாகம் அனுஸந்திக்கும்  ஸமயத்தில்  இந்த அனுவாகத்தில்  ஆச்ராவயேதி முதலான 17 ன் 4 விதமான ப்ரஸம்ஸை புரிந்தது, அதாவது,

1,यो वै यज्ञस्य प्रायणं प्रतिष्ठामुदयनं वेद, प्रतिष्ठितेनारिष्टेन यज्ञेन संस्थां गच्छति, आश्रावयास्तुश्रौषट् यज ये यजामहे वषट्कारः  एतद्वै यज्ञस्य प्रायणं एषा प्रतिष्ठा एतदुदयनं यएवं वेद प्रतिष्ठितेनारिष्टेन यज्ञेन संस्थां गच्छति  யாவனொருவன் யஞ்ஞத்தின்  ஆரம்பம் ப்ரத்ஷ்டை முடிவை அறிகிறானோ அவன்  யஞ்ஞத்தோடு கூடியிருக்கிறான் என்று பலத்தை கூறி யஞ்ஞத்தின்  ஆரம்பம் ப்ரத்ஷ்டை முடிவு  எல்லாம்  இந்த 17தான்  இதை எவன் அறிகிறானோ அவன்  யஞ்ஞத்தோடு கூடியிருக்கிறான் என்று பலத்தை மீண்டும் கூறுகிறது

2, यो वै सूनृतायै दोहं वेद दुह एवैनां यज्ञोवै सूनृता, आश्रावयेति——– वषट्कारेण दोग्धि, एष वै सूनृतायै दोहो य एवं वेद दुह एवैनां என யஞ்ஞத்தை ஸூந்ருதாவாக, வஷட்காரத்தால் கறப்பதாக கூறி பலத்தை மீண்டும் கூறுகிறது

,3,देवावै सत्रमासत——— आश्रावयेति पुरोवातमजनयन्— अभ्यस्तनयन् वषट्कारेण,,——य एवं वेद

என மழையை உண்டுபண்ணார்கள் என்று கூறி பலத்தை கூறுகிறது

4. य एवं वेद पुण्यो भवति, மேலும்  இப்படிப்பட்ட ப்ரஜாபதியை எந்த ஒருவன் அறிகிறானோ, சந்தஸ்யமான 17 அக்ஷரமான ப்ரஜாபதியை அறிபவன் புண்யனாகிறான், य एवं वेद पुण्यो भवति,  புண்யத்துடன் கூடியவனாகிறான் என,

இப்படியிருக்க இந்த 17 ஐ  நம்மத்திகிரித்திருமால் திருவாராதநத்தில் ஸமன்வயம் செய்தாலென்னவாகும் என நினைத்து அனுபவித்தேன். உள்ள பல ச்ருதியே  “ப்ரதி யஞ்ஞேந திஷ்டதி ந யஞ்ஞாத் ப்ரம்சதே”  போதுமானது,

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here