Kaisika Dwadasi at Srithooppul

0
750 views

Kaisika Dwadasi was celebrated today (25th Nov 2012) at Srithooppul. Here is a write by Sri Satagopa Thatacharyar Swami along with photos taken during the occasion

 

 

 

தாஸஸ்ய விண்ணப்பம். இன்றையதினம்   நமது ஸம்ப்ரதாயத்தில் ஸுதினமாகும். எல்லா திவ்யதேசம் மற்றும் ஸ்ரீவைஷ்ணவ ஆலயங்களில்  அவரவர் அதிகாரப்படி கைசிகமாஹாத்ம்யம்  விண்ணப்பம் செய்திருப்பார்கள். இந்த க்ரமத்தில் ஸ்ரீதூப்புலில் திருத்தண்கா திவ்யதேசத்தில் தாஸனுக்கு கைசிகமாஹாத்ம்யம் விண்ண்ப்பம் செய்ய அவகாசத்தை எம்பெருமான் ஸங்கல்பித்து நிர்விக்னமாக நடத்திவைத்தார். புராணம ஸேவித்தபிறகு  நடைபெற்ற மந்த்ரபுஷ்பத்தில்  ஸ்தலத்துபாட்டு   ஸேவிக்கும் ஸமயத்தில் தாஸனுக்கு கிடைத்த அனுபவம் வருமாறு.

ஸ்ரீவிளக்கொளிப்பெருமாளின் விஷயமாக மூன்றுபாசுரம் அமைந்துள்ளன…..

நம்மாழ்வார் திருவிருத்தத்தில் நானிலம்வாய்க்கொண்டு  எனும் பாசுரத்தில் கண்ணன் தொழும் வெஃகாவுது  அம்பூம் தேனிளம்சோலையப்பாலது என திருத்தண்காவை திருத்தண்காவை சேர்த்து ஓரே பாசுரத்தில் அனுபவித்தார்.

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரியதிருமொழியில்  பொன்னமாமனியை என துடங்கி காணும் தண்காவிலே  என திருவேங்கடத்தி்ல் ஸேவித்த எம்பெருமானை திருத்தண்காவில்  ஸேவித்ததாக  ஸாதித்தார்.ஆக திருவேங்கடத்துடன்   இந்த திவ்யதேச்சத்துக்கு ஸாம்யம்  ஸாதித்தபடி.

திருநெடுந்தாண்டகதத்தில்  முளைக்கதிரை குறுங்குடியில் முகிலை என துடங்கி விளக்கொளியை மரதகத்தை  திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலை பாடகேட்டு  என  பாசுரம்  ரஸனீயமாக அமைந்தது, இங்கு  நம்மாழ்வார் அனுபவித்தபடி  இரு திவ்யதேசத்து எம்பெருமானையும்  சேர்த்து அனுபவித்துள்ளார்..மேலும் கைசிகமாஹாத்ம்யத்தில் குறிப்பிடப்பட்ட திவ்யதேசம் திருக்குறுங்குடியாகும்  அந்த திவ்யதேசத்தையும் இந்த பாசுரத்தில் சேர்த்து அனுபவித்தபடியால் திருத்தண்காவுக்கும் திருக்குறுங்குடிக்கும் ஸாதர்ம்யம்- ஸாஜாத்யம் உள்ளதுபோல் தோன்றியது.திருக்குறுங்குடியில் சென்று எம்பெருமானை ஸேவிக்கமுடியாத நமக்கு குறுங்குடிக்கு ஸாம்யமான திவ்யதேசத்தில் எம்பெருமானை ஸேவிக்கவும் கைசிகமாஹாத்ம்யம் விண்ணப்பம் செய்யவும்  அவகாசம் கிடைத்தமையை  எண்ணி ஸந்தோஷித்தேன்.

ஸ்ரீஸ்வாமி தேசிகனே இந்த ஸ்தலத்தவராவார் அவர் ஸ்ரீபட்டர் ஸ்தானத்தில்  இந்த திவ்யதேசத்தில் கைசிகமாஹாத்ம்யம் விண்ண்ப்பம் செய்ய ப்ராப்தமானவர். அவருக்கு ப்ரதிநிதியாக இங்கு ஸ்ரீதேசிகஸம்ப்ரதாயதுரந்தரர்களா

ன கோடிகன்னிகாதானம் தாததேசிகதிருவம்ஸஸ்தர்கள் ஸேவித்து வருவதால்  புராணகாரர் மரியாதையான தகடி பஹுமாநத்தை ஸ்வாமி தேசிகனுக்கு ஸமர்பித்து ஸ்ரீதேசிகன் ஸந்நிதியில்  புராணகாரருக்கு பஹுமானம் செய்வதாக தோன்றியது. ஸ்வாமி ஸந்நிதியில் தாஸனுக்கு கிடைத்த இந்த அனுக்ரஹமே  இந்த ஜன்மத்தில் கிடைத்த பெரும் பாக்யமாகும். தாஸனுக்கு கிடைத்த அனுபவத்தை  ஸஹ்ருதயர்களுக்கு  தெரிவிக்கஇதை  விண்ணப்பம்  செய்கிறேன்.இவ்விதம் பகவத் பாகவத ஆசார்யரின் அனுக்ரஹம்  கிடைத்தால் ஸ்வாமி தேசிகன்  ஸம்ஸார ஏஷ பகவந் அபவர்க ஏவ எனஸாதித்தது எத்தனை  பொருத்தமான ஸத்யமாகும் என தோன்றியது..
न दैवं देशिकात्परम् न परं देशिकार्चनात्।
श्रीदेशिकप्रियः

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here