மயர்வறவென்மனத்தே மன்னினான்

0
976 views

மயர்வறவென்மனத்தே மன்னினான் றன்னை,
உயர்வினை யேதரும் ஒண்சுடர்க் கற்றையை,
அயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை, என்
இசைவினையென்சொல்லி யான்விடுவேனே.

Meaning:

Oh! How shall I give up my adorable Lord now? He drove out ignorance and entered my heart fully. The roof and stock of all the omniscient celestials, he gave me his radiant self-light and glorious virtues.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “என் மாயப்பிறவி மயர்வுறுத்தேன்” என்று அருளிச்செய்த ஆழ்வாரை நோக்கி ‘ஆழ்வீர்! மாயப்பிறவி மயர்வு அறவேணு மென்பதுதானே உமது உத்தேச்யம்; அது நிறைவேறிவிட்டதாக நீரே சொல்லி விட்டீரே; இனி நீர் ஓய்ந்திருக்கமன்றோ’ என்று சிலர் சொல்ல, எம்பெருமானை எங்ஙனம் நாம் விடுவேனென்கிறார்.

அஜ்ஞாநராசியை வாஸநையோடே போகச்செய்ததுமன்றியே “இனி ஒரு நாளும் அது குடிபுகவொண்ணாது’ என்று என்னுடைய ஹ்ருதயத்திலே புகுந்து ஸ்திரமாக இருப்பவனும், அப்படி யிருந்துகொண்டு “நாவலிட்டுழி தருகின்றோம் நமன்றமர்தலைகள் மீதே” என்று சொல்லி யமபடர்கள் தலையிலும் அடியிட்டுத் துகைக்கும்படியான உயர்த்தியையுந் தந்தருள்பவனும். இப்படி யென்னை வசப்படுத்திக்கொள்வதற்குப் பாங்கான வடிவழகுடையவனும், இப்படி யென்னை வசப்படுத்திக் கொள்வதற்குப் பாங்கான வடிவழகுடையவனும், அப்படிப்பட்ட வடிவழகை யநுபவிக்கும் அயர்வறுமமரர்களை ஒரு நாடாகவுடையனும், என்னை இசைவித்துத் தன் தாளிணைக் கீழ்ப் புகுவித்துக் கொண்டவனுமான ஸர்வேச்வரனை என்ன ஹேதுவைக்கொண்டு விடுவேன்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here