வைப்பாம்மருந்தா மடியரை

0
900 views
Swami Nammazhvar
Swami Nammazhvar

வைப்பாம்மருந்தா மடியரை, வல்வினைத்
துப்பாம் புலனைந்தும் துஞ்சக கொடானவன்,
எப்பால் யவர்க்கும் நலத்தா லுயர்ந்துயர்ந்து,
அப்பால வனெங்க ளாயர் கொழுந்தே.

Meaning:

The Lord of infinite virtues, beyond reach of person and place is the darling child of the cowherd-clan. He is the medicine and the wealth of devotees; he will not allow the power of the senses to ruin them.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

கீழ்ப்பாட்டில் ‘ஐயோ! கைவல்யார்த்திகள் எம்பெருமானைப் பணிந்து க்ஷûத்ரமான பலனைப் பெற்றுப்போவதே!’ என்று அவர்களை நிந்தித்தார்; அவன்றன்னையே ஆசைப்பட்டிருக்குமவர்கள் திறத்தில் அவன் இருக்கும்படியை அருளிச் செய்கிறாரிப் பாட்டில். “வைப்பாம் மருந்தாம்” என்ற இரண்டாலும் எம்பெருமானுடைய உபேயத்வமும் உபாயத்வமும் சொல்லப்பட்டதாகும். “வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு” என்றும் “வைத்த மாநிதியாம் மதுசூனன்” என்றும் சொல்லுகிறபடியே கொள்ளக் கொள்ளக்குறையாத மஹாநிதிபோல * கொள்ளமாளாவின்ப வெள்ளமாய் எப்போதும் அநுபவிக்க வுரியனாயிருக்குந்தன்மை ‘வைப்பம்’ என்பதனால் சொல்லப்படுகிறது. அப்படி அநுபவிக்க சக்தியற்றவர்களுக்கு சக்தியைக் கொடுத்தருளுந்தன்மை ‘மருந்தாம்’ என்பதனால் சொல்லப்படுகிறது; இதுதான் உபாயத்வம்.

(அடியரை இத்யாதி.) வணங்காமுடிமன்னனாயிருக்கு மிருப்புத்தவிர்ந்து அவனையே பரம ப்ரயோஜனமாகப் பற்றி நிற்குமடியார் விஷயத்திலே மஹோபகவாஞ் செய்தருள்பவன்; அப்படிப்பட்ட அடியார்களை வலிய வினைகளிலே கொண்டுபோய் மூட்டவல்ல ஸாமர்த்தியத்தையுடைய இந்திரியங்களைத்தினாலும் நசித்துப்போகாமை செய்தருள்பவனென்றபடி.

(எப்பால் யவர்க்கும் இத்யாதி.) மண்ணுலகம் விண்ணுலகம் முதலான எல்லாவிடங்களிலும் எல்லாவற்றாலும் உயர்த்தி பெற்றிருப்பார் பலர் உண்டே; அவர்களெல்லாரையும் ஆனந்த குணத்தாலே வென்று அவர்களுக்கு எவ்வளவோ மேற்பட்டவனென்னவேண்டும்படியான நிலைமையிலே நிற்பவன்; இப்படிப்பட்ட ஒப்புயர்வற்றமேன்மை இருக்கச்செய்தேயும் அதனை யெல்லாம் மறைத்துக்கொண்டு கோபாலக்ருஷ்ணனாய்த் திருவவதரித்தவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here