வாரா வருவாய் வருமென் மாயா!

0
1,600 views

வாரா வருவாய் வருமென் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?

Meaning:

O Formless Lord that takes wonderful forms of will insatiable ambrosia, Delight of my heart, resident of Kudandail you are my protector, ending all my endless karmas. Having become your servant, must I still suffer?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

(வாராவருவாய்.) திருக்குடந்தையிலே புகவே நம் அபேக்ஷிதங்களெல்லாம் பெறலாமென்று புக்க ஆழ்வார் அங்ஙனம் பெறாமையாலே இன்னம் எத்தனையிடம் தட்டித் தியக்கடவேனோவென்கிறார். வாரா அருவாய் வரும் = நான்னுக்கு விஷமாகி வாராதே அரூவித்ரவ்யமாய் வருகிறவனே! என்கை- வெளியில் கண்ணாலேகண்டு அநுபவிக்க வாராதே, மறந்து பிழைக்கவு மொண்ணாதபடி அந்தரங்கத்திலே அருவியாய்க்கொண்டு வாராதே. மறந்து பிழைக்கவுமொன்னாதபடி அந்தரங்கத்திலே அரூபியாய்க்கொண்டு ப்ரகாசிக்கிற ஆச்சார்யபூதனே! மாயாமூர்த்தியாய் = ஒருபோதும் ஒருவிதமான விகாரத்தையு மடையாத வடிவுடைத்தவனே! கருமமடியான விகாரம் இல்லையென்கிறதத்தனை; ஆக்ரிதர் திறத்தில் அநுக்ரஹமடியாக விளையும் விகாரம் சாஸ்த்ரவரம்புக்குக் கட்டுப்பட்டதன்றே. ஆராவமுதாய் அடியேனாவியகமே தித்திப்பாய்! = எல்லார் வாயினும் ஆராவமுது என்று வருகிறப்போலேயே என்வாயிலும் வருகிறபடி! *

உளங்கனிந்திருக்குமடியவர்கள் தங்கள் உள்ளந்துளூரிய தேனை* என்னுமாபோலே என்னுடைய அந்தரங்கமகப்படத் தித்திக்கும்படியை நானென் சொல்வேனென்கிறார்.

(தீராவினைகள் இத்யாதி.) அநுபவித்தே தொலைக்கவேண்டிய வினைகளும் தொலையுமாறு என்னையடிமை கொள்குகைக்குத் திருக்குடந்தையிலே வந்து நித்ய ஸன்னிதி பண்ணியிருக்குமவனே! ஸம்ஸாரிகளை அநுபவிப்பிக்கவந்து கிடக்கிறவுனக்கு ஆட்பட்டும் இன்னும் என் ஆர்த்தி தீரப்பெற்றதில்லையே. இன்ன மெத்தனை திருப்பதிகள் புக்குத் தட்டித்திரியங்கடவேனாகத் திருவுள்ளமோ? தெரியவில்லையே என்கிறார்.

நான்காமடியின் முதற்சொல் ஊரா! என்றும் ஊராய்! என்றும் இருவகையிலும் பொருந்தும். ஊரன் என்பது விளியுருபு ஏற்றால் ‘ஊரா’ என்றாகும் ஊரான் என்பது விளியுருபு ஏற்றால் ஊராய் என்றாகும்.

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here