Tiruvaaymozi

0
645 views

ஆழி எழ

திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும்

சங்கும் வில்லும் எழ

பாஞ்சஜந்யமும் சார்ங்கமும் தோன்றவும்

தண்டும் வாளும் எழ

கதையும் நந்தகமும் தோன்றவும்

திசை வாழி எழ

திசைகள் தோறும் மங்களாசாஸன கோஷம் கிளம்புவும்

(உயரவளர்ந்தபடியாலே)

அண்டம் மோழைஎழ

அண்டகபாலம் பிளந்து ஆவரணஜலம் குமிழி கிளம்பும் படியாகவும்

முடி பாதம் எழ

(வளர்ந்த விரைவாலே) திருமுடியும் திருவடியும் ஒக்கக்கிளம்பும் படியாகவும்

ஊழி எழ

மாவலியால் துன்பப் பட்டகாலம் போய்) நல்லகாலம் வந்து தோற்றும்படியாகவும்

அப்பன்

ஸர்வேச்வரன்

உலகம் கொண்ட ஆறே

(திரிவிக்கிரமனாய்) உலகங்களையளந்து கொண்டபடி என்னே!.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

(ஆழியெழ.) முதன்முதலாக உலகளந்த விஜயாபதாநத்தை அநுஸந்தித்து உகக்கிறார். உலகில், தலைவனான அரசனுக்கு ஒரு காரியம் ஆகவேண்டியிருந்தால் பரிகாரங்கள் முன்னின்று காரியஞ்செய்து தலைவனுக்கு வெற்றியை யுண்டாக்கப்பார்ப்பதென்கிற ஒரு முறை யுண்டே; அந்த ரீதியிலே, ஆயுதங்களில் தலைவனான திருவாழியாழ்வான் முந்துற முன்னம் வியாபரித்தபடியைப் பேசுகிறார் ஆழியெழவென்று. பெருமாள் காட்டுக் கெடுந்தருளப் புறப்படுவதற்கு முன்னே இளைய பெருமாள் தாம் முற்பட்டதுபோல, எம்பெருமானுடைய திருவடி உலகளக்க நிமிர்வதற்கு முன்னை திருவாழியாழ்வான் தான் முன்னே உயர்ந்து தோற்றினானாயிற்று.

கருகுமிடம் பொருது – கைந்நின்ற சக்கரத்தன் என்கிறபடிழியு எம்பெருமான் நினைப்பிட்டவிடத்திலே சடக்கெனச் சென்று காரியம் தலைக்கட்டித் திரும்புமாற்றல் படைத்தவனான திருவாழியாழ்வான் ‘இந்த மாவலியின் செருக்கை யடக்க தேவரீர் வேணுமோ? அடியேனுக்கு நியமித்தருளினால் ஒரு நொடிப்பொழுதில் நிறைவேற வேண்டிய காரியமன்றோ இது’ என்று அவலீலையாகப் பேசுவான் போலே தான் முன்னே யெழுந்தானாயிற்று. எம்பெருமான் எந்த அவதார மெடுத்தாலும் திருவாழியாழ்வான் தான் முன்னிருந்து காரியஞ் செய்பவன். இதை ஸீபூத்யாம்” என்கிற ஸ்ரீஸீக்தியாலே நன்குணரலாம். ராமாவதாரம் வராஹாவதாரம் நரஸிம் ஹவதாரம் பரசுராமாவதாரம் முதலியவற்றில் திருவாழியாழ்வானுடைய ப்ரஸதாவம் இல்லேயானாலும், ராமாவதாரத்தில் அம்பிலே ஆவேசித்தும், வாராஹாவதாரத்தில் கோரப்பல்லிலே ஆவேசித்தும், நரஸின்ஹாவதாரத்தில் திருவுகிரிலே ஆவேசித்தும், பரசுராமாவதாரத்திலே மழுவிலே ஆவேசித்துன் இப்படி ஒரோரவதாரந்தன்னிலே ஒரொருவஸ்துவாக இருந்து காரியஞ் செய்தவன் திருவாழியாழ்வானேயென்கிறது மேற்குறித்த ஸுதர்சநசதக ச்லோகம். வாணீ பௌராணிகீயம் ப்ரதயதி மஹிதம் ப்ரேக்ஷ்ணம் கைடபாரே:” என்கிற அதற்கு முந்திய பாதமானது எம்பெருமானுடைய ஸ்ங்கல்பமேதான் திருவாழியாழ்வனென்கிறது.

த்ரிவிக்ரமாவதாரத்திற்கு முந்தியதான வாமநாவதாரம் முதற்கொண்டே திருவாழியாழ்வான் காரியஞ் செய்து வருகிறானென்பதும் இங்கு அறியத்தக்கது. அது என்னென்னில்; வாமன் மூர்த்தியின் வடிகழகாலும் மழலைச்சொல்லாலும் மன மகிழ்ந்த மஹாபலி மூவடி மண்ணைக் கொடுக்க யத்தனித்தவளவிலே, அவனுடைய ஆசாலீயனான சுக்கிரன் எம்பெருமானது வடிவையும் வந்த வகையையும் பேச்சையும் ஊன்றிப்பார்த்து ‘இவன் ஸர்வேச்வரன், தேவகார்யம் செய்யும் பொருட்டு உன் செல்வத்தை யெல்லாம் பறித்துப் போக வந்தான்; ஆகையால் நீ இவனுக்கு ஒன்றும் தரத் தகாது’ என்று தானத்தைத் தடுக்க, அவன் அதை ஆதரியாமல் தாரைவார்த்து தத்தம் செய்யுப்புக, ஜல பாத்திரத்தின் (திருக்காவிரியின்) த்வாரத்திலே அந்த சுக்ரன் புகுந்துகொண்டு தீர்த்தம் விழவொட்டாமல் தடுக்க, ஸ்ரீ விஷ்ணு த்வாரம் சோதிப்பவன் போல, தன்னுடைய திருக்கையிலணிந்த தர்ப்ப பவித்ரத்தின் நுனியால அவனது கண்ணைக் குத்திக் கலக்க, அவனும் கண்கெட்டு அங்கு நின்றும் வெளிப்பட, பின்பு மாவலியினிடத்தில் நீரேற்றுப் பெற்றனனென்பது வரலாறு. இக்கதையை யருளிச்செய்யாநின்ற பெரியயாழ்வார் மிக்க பெரும் புகழ் மாவலிவேள்வியில் தக்கதிதன்றென்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பால்கிளறிய சக்கரக்கையன் என்றருளிச் செய்திருத்தலால் (அதாவது, துரும்பாற் கிளறிய சக்கரம் என்ற சொல்லாற்றலால்) கருதுமிடம் பொருது – கைந்நின்ற சக்கரத்தன் என்றபடியே திருமால் விரும்பிய இடங்களில் விரும்பின வடிவங்கொண்டு செல்லுந் தன்மையுடைய திருச்சக்கரமெ பவித்ரத்தின் வடிவத்துடன் நின்று சுக்கிரன் கண்ணைக் கலக்கியதாக ஆசிரியர் நிர்வஹிப்பதுண்டு. அஃது இங்கு அறியத்தக்கது.

ஈட்டு ஸ்ரீ ஸீக்தி;-“(ஆழியெழ.) இவன் வளர்ந்தருளுகைக்குக் கணிசித்த படியைக் கண்டு, தனியாக வெண்ணாதென்று பயப்பட்டுத் திருவாழியாழ்வான் ஒரு கையிலேயேறினார்.”

சங்கும் வில்லுமெழ—தங்களுக்குள்ளே தலைவனான வொருவன் எழுந்து காரியஞ் செய்தால் மற்ற அநுசரர்கள் வாளாவிருக்க வொண்ணுமோ? அவர்களுமெழுந்து காரியஞ் செய்ய நேருமன்றோ; ஆகவே திருவாழியெழுந்தது கண்டு சங்கும் வில்லுமெழுந்தன. இங்கே, இடங்கை வலம்புரி நின்றார்ப்ப, எரிகான்றடங்காரொடுங்குவித்ததாழி, விடங்காலுந் தீவாயரவணைமேல் தோன்றல் திசையளப்பான் பூவாரடி நிமிர்த்த போது. என்ற பூதத்தாழ்வார் பாசுரமும் அநுஸந்தேயம், சுக்கிரன் கண்ணை துரும்பாற்கிளறியும் மன்னுநதுமுசியை வானிற்சுழற்றியும் இப்படி எம்பெருமான் வெற்றிபெற்று உலகங்களை யளக்கப்பெற்ற ஸந்தோஷமிகுதியினால் திருச்சங்காழ்வான் இடத்திருக்கையி லிருந்துகொண்டு பகைவர் அஞ்சி நடுங்கும்படி பெருமுழக்கஞ் செய்தான். திருவாழியாழ்வான் வலத்திருக்கையிலிருந்துகொண்டு சத்துருக்கள் மண்ணுண்ணும்படி பெருஞ்சுடர் விட்டு ஜ்வலித்தான்-என்று தாற்பரியம்.

திசைவாழியெழ—திசைகள் தோறும் அநுகூலருடைய வாழி வாழி யென்கிற மங்களாசாஸந த்வநி கிளர்ந்ததாயிற்று. இங்கே ஈட்டு ஸ்ரீஸீக்தி காண்மின்;- அவனுக்கு என்வருகிறதோ வென்றாயிற்று திவ்யாயுதங்கள் கிளருகிறது; அவை தனக்கு என் வருகிறதோ வென்று வடிவார்சோதி வலத்துறையுஞ் சுடராழியும் பல்லாண்டு, படைபோர்புக்கு முழங்கு மப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டு என்னா நிற்பர்களிறே. நின்கையில் வேல் போற்றி என்றுவேல் தனக்கும் பரிய வேண்டியிருக்குமிறே.” என்று.

தண்டும் வாளுமெழ—பஞ்சாயுதங்களினுடையவும் எழுச்சியைச் சொல்ல நினைத்த ஆழ்வார் முன்னம் ‘ஆழியெழச் சங்கும் வில்லுமெழ’ என்று மூன்று ஆயுதங்களின் எழுச்சியைச் சொல்லி இப்போது மற்றை யிரண்டாதங்களின் எழுச்சியைச் சொல்லுகிறார். இடையில் “திசைவாழி யெழ” என்றதனால் அந்த திவ்யாயுதங்களுக்கும் மங்களாசாஸனம் பண்ணுவாருளரென்று சொன்னதாயிற்று.

அண்டம் மோழை யெழ—தாழ்வின்றி வளர்ந்தபடியாலே அண்டகபாலம் பிளந்து ஆவரண ஜலம் குமிழி கிளம்பும் படியாக என்றபடி. தன்னுடைய வளர்ச்சிக்கு அண்டாந்தராளம் இடம் போராமையாலே விம்மி அண்டபித்தி பிளந்து ஆவரண ஜலம் உள்ளே வந்து புகும்படியாக வென்கை.

மூடி பாதமெழ—திருமுடியும் திருவடிகளும் ஒரு சேர எழ என்று இதனால் வளர்ந்தருளின் சடக்கு சொன்னபடி. ஊழியெழ—ஆஸீரப்ரக்ருதியான மஹாபலி அஹங்கரித்திருந்த கொடிய காலம் தொலைந்து நல்லடிக்காலம் தோன்ற என்றபடி. ஊழி என்பது பொதுவாகக் காலத்தைச் சொல்லுமதானாலும் இங்கு ப்ரகரணம் நோக்கி விலக்ஷ்ணகாலமென்று பொருள்படும். ஆக விங்ஙனேயாக, அப்பன் உலகங்கொண்டவாறே—மஹோபகாரகனான ஸர்வேச்வரன் உலகத்தை அளந்து கொண்டபடி யென்னே! என்று ஈடுபடுகிறார்.

The discus grew, the conch and the bow also grew, the Earth resounded, “Hail!, the mace and the dagger grew. The world become a bubble, the Lord’s foot touched the Asura’s head. Oh! How my father grew and strode the Earth, heralding a new age!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here