Uthamur Sri Veeraraghavarya Mahadesikan ThirunakshatrAm on January 17, 2012

0
1,289 views

Tomorrow (January 17, 2012 – Thai SwAti) is the ThirunakshatrAm of SrI Abhinava DESika Uthamur SwAmi – Uthamur Sri Veeraraghavarya Mahadesikan, most popularly known as”Uthamur Swamy”.

THANIYAN:

Adbhutam Yasya VikrAntam vEda vIthI ViSOdhanE |
Aparam NigamAntAryam PrapadyE vIrarAghavam ||

(composed by Swamy’s Acharyan. Sri Khozhiyalam Swamy)

Swamy is the disciple of Sri KozhialAm Swamy – the greatest Acharyan of our times. Sri KozhialAm Swamy trained several luminaries, the “chief among them” being Sri Uthamur Swami.

In the history, if there was one Sishya for whom the Acharya (Sri KhozialAm) composed a Thaniyan, it is Sri Uthamur Swamy. Such is the scholarly greatness of Sri Uthamur Swamy. I was also told that Srimath Injimedu Azagiyasinger will not open or start  a “Vidwath-Sadas” until and unless Sri Uthamur Swamy joins / arrives.

Sri Uthamoor Swami had written nearly 300 works connected with Ramanuja Darsanam.

Uthamoor Swami’s Grantams, VyakyanAms (analysis) and Works are innumerable. These are being extensively quoted and referred to in upanyasams, kalakshepams and also in day-to-day life by many acharyars and sishyas.

அபிநவதேசிக உத்தமூர் தி..வீரராகவாச்சாரியர் ஸ்வாமி

இந்த ஸ்வாமி^ தை மாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் பையம்பாடியில் அவதரித்தார். காவிய நாடகங்களைத் தமது திருத்தகப்பனாராகிய ஸ்ரீ உ.வே.சக்ரவர்த்யாச்சாரியரிடம் வாசித்தபிறகு மதுராந்தகத்தில் ஸ்ரீமதுபயவே ஸ்வச்சந்தம் ஸ்ரீநிவாஸாசாரியரிடம் தர்க்க பாடங் கேட்டார். பிறகு திருவையாறு கலாசாலையில் சேர்ந்து ந்யாய மீமாம்ஸா சிரோமணியில் தேறி சிறிது காலம் அங்கு விமர்சகராய் எழுந்தருளியிருந்தார். பிறகு ஸ்ரீமத் உபயவே கபிஸ்தலம் தேசிகாசாரிய ஸ்வாமியின் அழைப்பின்பேரில் திருப்பதி ஸ்ரீ வெங்கடேச்வர ஸம்ஸ்க்ருத கலாசாலையில் நியாய மீமாம்ஸா ப்ராத்யாபகராய் எழுந்து அருளியிருந்தார். இதனிடையில் தமது தீர்க்க பந்துவான ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீ கோழியாலம் ஸ்வாமி ஸந்நிதியில் உபயவேதாந்த கிரந்த காலக்ஷேபங்களைச் செய்தருளி அந்த ஸ்வாமியின் திருவடிவாரத்தில் உபாயானுஷ்டானம் செய்தருளினார். பிறகு திருப்பதி கலாசாலையின் முதல்வராக பலகாலமிருந்து பல வித்வத்ரத்னங்களை பாரத தேசம் முழுவதற்குமாக அளித்துதவி யருளினார். இன்று ந்யாய சாஸ்திரத்தில் பிரபலமாய் விளங்கும் பண்டிதர்கள் யாவரும் ஸாக்ஷாத் ஆகவோ பரம்பரையாகவோ இந்த ஸ்வாமி யினிடம் பாடம் கேட்டவர்களே என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த ஸ்வாமி வித்யார்த்தி தசையிலேயே ந்யாய சாஸ்திரத்தில் உத்க்ரந்தமான “ந்யாயகுஸுமாஞ்ஜலி”க்கு விரிவான ஒரு உரையை இட்டருளினார். இதற்கு “குஸுமாஞ்ஜலி விஸ்தரம்” என்பதாகப் பெயர். இந்த உரையின் மேன்மையைக் கடாக்ஷித்தருளிய ஸ்ரீமதுபயவே மஹாவித்வான் ஸ்ரீபெரும்பூதூர் ஆஸூரி ராமானுஜாசார்ய ஸ்வாமி “தேவாம்சமில்லாதவரால் இந்த உரை எழுதியிருக்க முடியாது” என்று ஸாதித்தாயிற்று. மேலும் இவர் அருளிச் செய்த கிரந்தங்கள் வருமாறு”—

(1) நியாய பாஷ்ய ப்ரதீபம்; அச்சாகவில்லை
(2) “வைசேஷிக ரஸாயனம்” இருமுறை அச்சாகியுள்ளது .
(3) “அவயவ க்ரோட பத்ரம்”
(4) “நியாய பரிசுத்தி வியாக்யானம்”  ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகன் அருளிச் செய்த நியாய பரிசுத்திக்கு உரை
(5) “கிருஷ்ணம் பட்டீய க்ரோடபத்ரம்”
(6) “தர்கஸங்கரஹ வ்யாக்யானம்” முதலியன.
(7) “ஸ்ரீ வேங்கடேச கல்யாண சரிதம்” (காவியம்)
(8) “ஸ்ரீவேங்கடேச ஸ்தோத்ரம்”
(9) “பத்மாவதீ ஸ்தோத்ரம்”
(10) “ஸ்ரீ ஜானகீ சதகம்” முதலிய ஸ்தோத்ரங்கள்.
(11) “பரமார்த்த ப்ரகாசிகை”
(12) “பரமார்த்த பூஷணம்”
(13) “நயத்யுமணி பூமிகை உரை
((14) ஸ்ரீ ஆழ்வார்களின் நாலாயிரம் பாசுரங்களுக்கும் “ப்ரபந்த ரக்ஷை” என்கிற உரை
(15) உபநிஷத் பாஷ்யங்களை யாவற்றிற்கும் உரையாகிய “பரிஷ்காரம்”
(16) “வேதாந்த புஷ்பாஞ்ஜலி” என்கிற உபநிஷதர்த்த ஸங்கிரஹமான (ஸ்ரக்தாவ்ருத்தத்தில்) விரிவான ஸ்தோத்ரம்
(17) “உபநிஷத் ஸாரம்”
(18) “வேதாந்த கரிகாவளி”
(19) “வசன ஹ்ருத்ய விமர்சம்”
(20) ”ஈசாவாஸ்யோபநிஷதாசாரிய பாஷ்ய தாத்பரியம்”
(21) “நியாய ப்ரகாச வ்யாக்யானம்”
(22) “ப்ரபன்ன பாரிஜாத வ்யாக்யானம்”
(23) நிக்ஷப ரக்ஷைக்கு வ்யாக்யானம்
(24) “யாதவாப்யுதய டிப்பணம்”
(25) தமிழ் மொழி பெயர்ப்பு “வைகானஸ விஜயம்”
(26) “ஸர்வார்தஸித்தி டிப்பணம்”
(27) வேதாந்த தீபத்தின் மொழி பெயர்ப்பு
(28) ஸ்ரீஸஹஸ்ர நாம நிர்வசனத்தின் விளக்க உரை
(29) “சரணாகதி கத்ய விவரணம்”
(30) நியாஸாதிகார ஸர்வஸ்வம்”
(31) ஸ்ரீ ச்ருதப்ரகாசிகா டிப்பணம்”
(32) ஸ்ரீபாஷ்ய வ்யாக்யானம் தர்பணம்” முதலியன.

இன்னும் இது தவிர ஸ்ரீபாவப்ரகாசிகை முதலிய ஸகல பூர்வாசாரிய கிரந்தங்களையும் முத்ரணம் செய்து பரிஷ்கரித்து உலகத்தாருக்கு அருளியுள்ளார். “ஸ்ரீஸித்தித்ரய வியாக்யானம்” அதிபால்யத்தில் அருளிச் செய்தது முதலியனவும் இங்கு நினைவுறத் தக்கது. இன்னும் பல கிரந்தங்கள் அருளிச் செய்திருக்கிறார். அவை அச்சுக்கு வரவில்லை. அநேகமாய் எல்லா பூர்வாசாரிய கிரந்தங்களுக்கும் “ஸங்க்ஷிப்தம் விஸ்த்ருதம்வா” என்கிற கணக்கில் டிப்பணம் முதலியன அருளிச் செய்துள்ளார். தற்போது * ஸ்ரீஸ்வாமி தேசிகனது ஸகல கிரந்தங்களுக்கும் உரை அருளிச் செய்து கொண்டு அதிவிலக்ஷணராய் சென்னை மாம்பலம் நாதமுனி வீதியில் நாதோபக்ஞமான நமது ஸித்தாந்தத்தை ப்ரவசநம் செய்து கொண்டு எழுந்தருளியிருக்கும் இந்த ஸ்வாமி வெகு நாட்கள் எழுந்தருளியிருந்து நமது தேசிக தர்சனத்துக்கு இன்னும் இதோ அதிகமான சாஸ்த்ரீய கைங்கர்யங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டி பேரருளாளன் பெருந்தேவித் தாயாரை ப்ரார்த்திக்கிறோம்.
சேட்டலூர் ஸ்ரீவத்ஸாங்காசாரியார்.

————————————————————————————————
^  ஆங்கில ஆண்டு 1898
* வாசகர்கள் ஞாபகம் கொள்ள வேண்டியது இந்த வ்யாஸம் எழுதப்பட்டு மலர் வெளியிட்ட 1968ல் ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமி ஸ்ரீதேசிக தர்சன கைங்கர்யங்களில் ஒப்பற்றவராய் வாழ்ந்து கொண்டிருந்த காலம். ஸ்வாமி பரமபதித்தது 1983ல்.

இணையத்தில் உத்தமூர் ஸ்வாமி என்று தேடினால் ஸ்வாமியைப் பற்றி பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன. அவரிடம் நெருங்கிப் பழகும் பாக்யம் பெற்ற பல மஹான்கள் இன்று இருப்பதால் உத்தமூர் ஸ்வாமியைப் பற்றி மேலும் விரிவாக அறியலாம். மலரில் இட அளவு கருத்தில் கொண்டு ஸ்ரீமதுபயவே ஸ்ரீவத்ஸாங்காச்சார் ஸ்வாமி மிக அவசியமான தகவல்களை மட்டும் சொல்லியிருக்கிறார்.

உத்தமூர் ஸ்வாமியைப் பற்றி “ மாலுகந்த ஆசிரியர்” என்னும் அற்புதமான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கும் அடியேனது அபிமான ஸ்ரீ D.R. ஸ்வாமி ஸ்வாமியின் திருநாமத்தை இப்படி வர்ணிக்கிறார்.

V eerarAghavAchArya Swamy of UttamUr !
E lated do we feel, – relations, disciples, admirers,
E ighty years of sacred, pure and dedicated life !
R are specimen of profound scholarship and prolific authorship,
A fine exponent of ancient culture in methods modern and attractive,

R edoubtable authority on all systems of philosophy,
‘A bhinava DESika’, Thou art acclaimed by the knowing ones,
G reat indeed are Thy achievements, as great as DESika’s,
H ighlighted by Thy professorship in many colleges of Sanskrit lore,
A nd AchAryaship imparting KAlakshEpam to sishyas galore,
V EdAntas twain ever at Thy finger’s ends,
A t home equally in Scriptures – Sanskrit and Tamil,
C ommenting on the Upanishads in each, with equal felicity,
H is Holiness KOzhiyAlam Saint’s favourite and chosen disciple,
A ttached deeply to Lord SrInivAsa, Thy patron Deity,
R ecipient ever of His Grace and Blessings, sacred and mighty,
Y ears and years more, may Thou live in peace and plenty,
A dorning the AchArya-Peeta with lustre, great and lofty.

Thats what the sacred name of the AchArya “VeerarAghavAchArya” is all about

Write up in tamil by Sri Raghuveer Dayal from Thiruppullani

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here