எத்தனை எத்தனை மஹான்கள்! எத்தனை எத்தனை க்ரந்தங்கள்!- 3

0
2,165 views

This series is from ஸ்ரீ தேசிகன் 7ம் நூற்றாண்டு மலர், சென்னை. Thanks to Raguveeradayal Swami for bringing-out this wonderful details through his blog thiruthiru.wordpress.com

குரு பரம்பரை 

1.ஸ்ரீமந் நாராயணன்

            ப்ரதமாசார்யனான ஸ்ரீமந் நாராயணன் ஹயக்ரீவனாய் அவதரித்து சதுர்முகனுக்கு ஸகல வேதங்களையும் ஸார்த்தமாக உபதேசித்தும், பரவாஸு தேவனாகவே எழுந்தருளி யிருந்து பெரிய பிராட்டியாருக்கு ஸகல வேதாந்தார்த்தங்களை ஸ்ரீபாஞ்சராத்ர சாஸ்த்ர ரூபமாக வுபதேசித்தும் விஷ்வக்ஸேநர் முதலான ஆசார்யர்களை அதிஷ்டித்து ரங்கநாதன், திருவேங்கடமுடையான், தேவபெருமாள்,ஆராவமுதன், திருநாராயணன் முதலான அர்ச்சாரூபியாக வெழுந்தருளியிருந்து நாதமுனிகள் முதலிய ஆசார்யர்களை ப்ரவர்த்திப்பித்தும் ஸம்ப்ரதாய ப்ரவசநம் செய்தருளினார். இவர் திருநக்ஷத்திரம் திருவோணம்.

 குரும் வந்தே கமலாக்ருஹமேதிதம்|
ப்ரவக்தா சந்தஸாம் வக்தா பஞ்சராத்ரஸ்ய யஸ்வயம்||

2.  ஸ்ரீமஹாலக்ஷ்மி 

             ஸ்ரீவைகுண்டத்தில் விஷ்வக்ஸேநாதிகளுக்கு ஸ்ரீ பாஞ்சராத்திராதி ஸகல சாஸ்த்திரங்களையுமுபதேசித்தும் விபவாவதாரத்தில் ஸ்ரீந்ருஸிம்மாதிகளிடத்தில் ந்ருஸிம்ம புராணாதிகளைக் கேட்டு ப்ரவர்த்திப்பித்தும் சைதந்யஸ்தந்யதாயிநீ மென்கிற படியே ஆசார்யாதிகளை அதிஷ்டித்தும் ஸ்ரீரங்கநாயிகா ரூபேண அவதரித்து ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகனுக்கு ஸர்வதந்த்ரரென்கிற திருநாமத்தை அநுக்ரஹித்தும் ஸம்பிரதாய ப்ரவர்தனம் செய்தருளினார். திருநக்ஷத்திரம் பங்குனி உத்திரம்.

 ஸஹதர்மசரீம் சௌரே: ஸம்மந்த்ரித ஜகத்திதாம்|
அநுக்ரஹமயீம் வந்தே நித்யமஜ்ஞாதநிக்ரஹாம்|| 

3. சேனை முதலியார்

           இவருக்கு வாஸஸ்தானம் ஸ்ரீவைகுண்டம். இவர் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி நம்மாழ்வாருக்கு யோகதசையில் ஸேவை ஸாதித்து மந்தர மந்திரார்த்தங்களை உபதேசித்தார். இவர் அருளிய க்ரந்தம் விஷ்வக்ஸேநஸம்ஹிதை. இவர் திருநக்ஷத்திரம் ஐப்பசி பூராடம்.

 வந்தே வைகுண்ட ஸேநாத்யம்
     தேவம் ஸூத்ரவதி ஸகம்|
 யத்வேத்ரசிகரஸ்பந்தே
     விச்வ மேத்த வ்யவஸ்த்திதம் ||

4. ப்ரபந்நஜன கூடஸ்தரான நம்மாழ்வார்

           இவர் திருக்குருகூரில் கலி பிறந்து 43ம் நாள் ப்ரமாதி வருஷம் வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரத்தில் காரியென்கிற பாகவதருக்கு குமாரராக அவதரித்தார். இவர் அவதரித்தது முதல் யோகநிஷ்டராய் நிராஹாரராய் 35 வருஷம் திருப்புளியடியில் எழுந்தருளியிருந்து, மதுரகவிகளுக்கு திவ்யார்த்தங்களை உபதேசித்தும், நாதமுனிகளுக்கு யோகதசையில் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து எழுந்தருளி ஸார்த்தகமாய் மந்திரோபதேசாதிகளைச் செய்து அருளினார். இவர் அருளிய ப்ரபந்தங்கள்  (1) திருவிருத்தம் (2) திருவாசிரியம் (3) பெரிய திருவந்தாதி  (4) திருவாய்மொழி

 யஸ்ய ஸாரஸ்வத ஸ்ரோதேச வகுளாமோதவாஸிநம்|
ச்ருதீநாம் விச்ரமாயாலம் சடாரிம் தமுபாஸ்மஹே: 

5. ஸ்ரீமந்நாதமுனிகள்

           இவர் வீரநாராயணபுரமென்கிற அக்ரஹாரத்தில் சோபக்ருத் வருஷம் ஆனி மாதம் அநுஷ நக்ஷத்திரத்தில் சடமர்ஷண கோத்திரத்தில் ஈச்வர முனிக்கு குமாரராய் அவதரித்து ஆராவமுதன் நியமனத்தால் நம்மாழ்வாரை யோகதசையில் ஸாக்ஷாத்கரித்து ஸகல வேதாந்தார்த்தங்களையும் அதிகரித்து க்ருஹஸ்தாச்ரமத்தில் இருந்துகொண்டு ஸம்பிரதாய ப்ரவசநம் செய்து வந்தார். இவர் அருளிய க்ரந்தங்கள் : (1) ந்யாய தத்வம் (2)  யோகரஹஸ்யம்

 நாதேந முநிநா தேந பவேயம் நாதவாநஹம்|
 யஸ்ய நைகமிகம் தத்வம் ஹஸ்தாமலகதாந் கதம்||

6. உய்யக் கொண்டார்  (புண்டரீகாக்ஷர்)

             பராபவ வருஷம் சித்திரை மாதம் கிருத்திகை நக்ஷத்திரத்தில் திருவெள்ளறை திவ்ய தேசத்தில் அவதரித்தார். இவர் க்ருஹஸ்தாச்ரமரத்தில் ஸம்பிரதாய ப்ரவசநம் செய்தருளி 75 திருநக்ஷத்திரம் எழுந்தருளி இருந்தார்.

 நமஸ்யாம்யரவிந்தாக்ஷம் நாதபாவே வ்யவஸ்த்திதம்|
சுத்தஸத்வமயம் சௌரே: அவதார மிவாபரம்||

7. மணக்கால் நம்பி (ராமமிச்ரர்)

             இந்த ஸ்வாமி சோளதேசத்தில் காவேரி தீரத்தில் மணக்கால் என்னும் அக்ரஹாரத்தில் விரோதி வருஷம் மாசி மாதம் மக நக்ஷத்திரத்தில் அவதரித்து ஸ்ரீரங்கத்தில் க்ருஹஸ்தாச்ரமத்தில் எழுந்தருளியிருந்து ஸம்பிரதாய ப்ரவசநம் செய்தருளினார்.

 அநுஜ்ஜித க்ஷமாயோகம் அபுண்ய ஜநபாதகம்|
 அஸ்ப்ருஷ்ட மதராகம் தம் ராமம் துர்ய முபாஸ்மஹே|| 

8. ஆளவந்தார் (யாமுநாசார்யர் என்கிற பெரிய முதலியார்)

           இந்த ஸ்வாமி வீரநாராயணபுரத்தில் தாது வருஷம் ஆடி மாதம் உத்திராட நக்ஷத்திரத்தில் சடமர்ஷண கோத்திரத்தில் ஈச்வர பட்டாழ்வாருக்கு குமாரராய் அவதரித்து ஸ்ரீரங்கத்தில் துரீயாச்ரமத்தை க்ரஹித்து மணக்கால் நம்பி ஸ்ரீபாதத்திலே ஸர்வார்த்த க்ரஹணம் பண்ணி ஸம்பிரதாய ப்ரவசநம் செய்து வந்தார். இவர் அருளிய க்ரந்தங்கள் : (1) ஸ்தோத்ர ரத்நம் (2) ஸித்தித்ரயம் (3) கீதார்த்த ஸங்கிரஹம் (4) ஆகமப்ரமாண்யம் (5) சதுச்லோகி (6) மஹாபுருஷ நிர்ணயம்

 விகாஹே யாமுநம் தீர்த்தம் ஸாதுப்ருந்தாவநே ஸ்த்திதம்|
 நிரஸ்ய ஜிஹ்மகஸ்பர்சே யத்ர க்ருஷ்ண: க்ருதாதர:|| 

9. பெரிய நம்பி (மஹாபூர்ணர்)

           இந்த ஸ்வாமி ஸ்ரீரங்கத்தில் ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் கேட்டை நக்ஷத்திரத்தில் பாரத்வாஜ கோத்திரத்தில் அவதரித்து ஸ்ரீரங்காதிகளில் ஸம்பிரதாய ப்ரவசநம் செய்துகொண்டு யாக யக்ஞாத்யநுஷ்டாநத்துடன் எழுந்தருளி இருந்தார்.

 தயாநிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ணமாச்ரயே|
 வேத விச்வஸ்ருஜோ விஷ்ணோ: அபூர்யத மநோரத:|| 

10. எம்பெருமானார் (ராமாநுஜாசார்யர் ஸ்ரீபாஷ்யகாரர்)

           இந்த ஸ்வாமி ஸ்ரீபெரும்பூதூரில் பிங்கள வருஷம் சித்திரை மாதம் திருவாதிரை நக்ஷத்திரத்தில் ஹாரீத கோத்திரத்தில் ஆஸூரி கேசவ ஸோமயாஜிகளுக்குக் குமாரராய் அவதரித்து, மாதுலரான திருமலை நம்பிகளிடம் ராமாயணாதிகளையும், பெரியநம்பி யிடம் திருமந்திராத்யர்த்தங்களையும், திருமாலையாண்டான் ஸந்நிதியில் திருவாய்மொழி யையும் கேட்டருளினார். இவர் காசி க்ஷேத்திரத்தில் ஸ்ரீ சரஸ்வதியினால் கொடுக்கப்பட்ட ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவனை ஆராதித்துக்கொண்டு துரீயாச்ரமத்தில் ஸ்ரீரங்காதி திவ்ய தேசங்களில் ஸம்பிரதாய ப்ரவசநம் செய்து வந்தார். இவர் அருளிச் செய்த க்ரந்தங்கள்: (1) வேதார்த்த ஸங்கிரஹம் (2) ஸ்ரீ பாஷ்யம் (3) ஸாரம் (4) தீபம் (5,6,7) கத்யத்ரயம் (8) கீதா பாஷ்யம் (9) நித்யம்

 ப்ரணாமம் லக்ஷ்மணமுநி: ப்ரதிக்ருஹ்ணாது மாமகம்|
ப்ரஸாதயதி யத் ஸூக்தி: ஸ்வாதீநபதிகாம் ச்ருதிம்||

11. திருக்குருகைப்பிரான் பிள்ளான் (குருகேசர்)

இந்த ஸ்வாமி திருமலையில் (திருப்பதியில்) ஸ்ரீமுக வருஷம்  ஐப்பசி மாதம் பூர்வாஷாடா நக்ஷத்திரத்தில் சடமர்ஷண கோத்திரத்தில் திருமலை நம்பி குமாரராய் அவதரித்து எம்பெருமானாருக்குப் பிறகு, ஞாநபுத்திரரான இந்த ஸ்வாமி தனக்குத் தாயபாகமாகக் கிடைத்த ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவனை ஆராதித்துக்கொண்டு ஸம்பிரதாய ப்ரவசநம் செய்து வந்தார். பிள்ளானுக்குப் பிறகு சடமர்ஷண வம்சத்தவர்களான (1)புண்டரீகாக்ஷ தேசிகர் (2) சடகோப தேசிகர் (3) பத்மாக்ஷ தேசிகர் இவர்கள் வரையில் புத்ரபௌத்ரக்ரமமாய் வந்த ஹயக்ரீவனை – பத்மாக்ஷ தேசிகர் தன் குமாரரான திருமலை ஸ்ரீநிவாஸாசாரியாரை (ப்ரபந்தநிர்வாஹ க்ரந்த கர்த்தா)யும் லக்ஷ்மீ ஹயக்ரீவனையும் ஸ்வாமி தேசிகனிடம் ஒப்படைத்து ரக்ஷணம் பண்ணும்படி நியமித்தார். இவர் அருளிய க்ரந்தம்; பகவத் விஷயம், ஆறாயிரப்படி.

 விக்யாதோ யதிஸார்வ பௌம ஜலதே: சந்த்ரோப மத்வேத ய:
       ஸ்ரீபாஷ்யேண யதந்வயா ஸ்ஸுவிதிதா: ஸ்ரீவிஷ்ணு சித்தாதய:|
வ்யாக்யாம் பாஷ்யக்ருதாஜ்ஞயோபநிஷதாம் யோ த்ராவிடீநாம் வ்யதாத்:        பூர்ணம் தம் குருகேச்வரம் குருவரம் காருண்ய பூர்ணம் பஜே|| 

12. எங்களாழ்வான் (ஸ்ரீவிஷ்ணு சித்தர்)

           இந்த ஸ்வாமி ஸ்ரீரங்கத்திற்கு ஸமீபமான திருவெள்ளறை திவ்யதேசத்தில் கீலக வருஷம்  வைகாசி மாதம் சுவாதி நக்ஷத்திரத்தில் அவதரித்து ஸம்பிரதாய ப்ரவசநம் செய்து வந்தார். இவர் அருளிச் செய்த க்ரந்தம் : விஷ்ணுபுராண வ்யாக்யா, ஸ்ரீ விஷ்ணு சித்தீயம்.

 ஸ்ரீவிஷ்ணுசித்த பதபங்கஜ ஸங்கமாய
    சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண |
நோசேந் மமாபி யதிசேகரபாரதீநாம்
   பாவ: கதம் பவீதுமர்ஹதி வாக்விதேய:||

13. நடாதூர் அம்மாள் (வரத தேசிகர்)

           இந்த ஸ்வாமி பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் சித்ரா நக்ஷத்திரத்தில் ஸ்ரீவத்ஸ கோத்திரம் நடாதூர் வம்சத்தில் தேவராஜாசார்யருக்குக் குமாரராய் அவதரித்து தேவாதிராஜன் ஸந்நிதி கச்சிவாய்த்தான் மண்டபத்திற்கு முன்பு ஸம்பிரதாய ப்ரவசந கோஷ்டியை நடத்தியருளி ஸுதர்சநாசார்ய ரென்கிற சிஷ்யரை நியமித்தருளினார். அதன்பேரில் அந்த ஸ்வாமி ச்ருதப்ரகாசிகை என்கிற ஸ்ரீபாஷ்ய வ்யாக்யாநத்தைச் செய்தருளினார். அம்மாள் செய்தருளிய க்ரந்தங்கள்: தத்வஸாரம், ப்ரமேயமாலை முதலானவை.

 வந்தேஹம் வரதார்யந்தம் வத்ஸாபிஜநபூஷணம் |
பாஷ்யாம்ருதப்ரதாநாத் ய: ஸஞ்ஜீவயதி மாமபி ||

14. அப்புள்ளார் (ராமாநுஜாசார்யர்)

           இந்த ஸ்வாமி சித்திரை மாதம் திருவாதிரை நக்ஷத்திரத்தில் ஆத்ரேய கோத்ரத்தில் ஸ்ரீரங்கராஜப்புள்ளாருக்கு குமாரராய் அவதரித்து, அம்மாள் ஸந்நிதியில் ஸ்ரீபாஷ்ய, கீதா பாஷ்ய பகவத் விஷயங்களாகிய இந்த மூன்று கிரந்தங்களையும் திருத்தகப்பனாரான ஸ்ரீரங்கராஜரிடத்தில் ரஹஸ்யார்த்தமும் க்ரஹித்து ப்ரதிவாதிகளை ஜயித்ததனால் வாதிஹம்ஸம்புவாஹர் யென்கிற திருநாமம் பெற்று ஸ்ரீநிகமாந்த மஹா தேசிகனுக்கு ஸகல சாஸ்திரார்த்தங்களை உபதேசித்து அநுக்ரஹித்தருளினார். இவர் அருளிய க்ரந்தங்கள் : ந்யாயகுலிசம் முதலியது.

 யஸ்மாதஸ்மாபி ரேதத் யதிபதிகதிப்ராக்த்நப்ரக்ரியோத்யத்

கர்ம ப்ரஹ்மாவமர்சப்ரபவஹுபலம் ஸார்த்தமக்ராஹி சாஸ்த்ரம்|

தம் விஷ்வக்பேதவித்யா ஸ்திதிபதவிஷயம் ஸ்தேயபூதம் ப்ரபூதம்

வந்தேயாத்ரேய ராமாநுஜ குருமநகம் வாதிஹம்ஸாம்புவாஹம்||

…..தொடரும்………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here