எத்தனை எத்தனை மஹான்கள்! எத்தனை எத்தனை க்ரந்தங்கள்!- 1

0
1,456 views

This series is from ஸ்ரீ தேசிகன் 7ம் நூற்றாண்டு மலர், சென்னை. Thanks to Raguveeradayal Swami for bringing-out this wonderful details through his blog thiruthiru.wordpress.com

ஸ்வாமி தேசிகனின் 7வது நூற்றாண்டு வைபவத்தின் அங்கமாக வெளியிடப்பட்ட சிறப்பு மலர் ஒரு அரிய பொக்கிஷம். ஸ்ரீ ஸேவா ஸ்வாமியின் அபார உழைப்பால் வெளியான அந்த மலர் ஸ்ரீ தேசிகனின் பன்முகப் பெருமைகளை பலபடியாலும் போற்றிப் பாராட்டி அந்நாளில் எழுந்தருளியிருந்த பல தேசிக பக்தர்கள் எழுதிய உரைகளால் நிறைந்து எதிர்கால சந்ததிகள் ஸ்வாமி தேசிகனைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள உதவுகின்ற ஒரு அற்புத மஞ்சரி. சமீபத்தில் அடியேன் கையில் கிடைத்த அந்த மலரிலிருந்து ஏற்கனவே சிலவற்றை  (உதாரணமாக ஸ்ரீ D.R. ஸ்வாமியின் “தேசிகோ மே தயாளு”) இணையத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த மலரில் ஸ்வாமி தேசிகனைப் பற்றி மட்டுமல்லாது, அவர் திருவடி போற்றி உயர்ந்த பல மஹான்கள், அவர்கள் நம் ஸ்ரீவைணவ சம்ப்ரதாயத்துக்கு ஸ்வாமி தேசிகன் வழியில் இயற்றிய க்ரந்தங்கள் பற்றியும் நிறைய விவரங்கள் உள்ளன. 600 பக்க மலரில் சுமார் 100 பக்கங்களுக்கும் மேலாக இம்மஹான்களைப் பற்றிய விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.

நம் ஸம்பிரதாய ஸ்வாமிகளும்
அவர்கள் அருளிய க்ரந்தங்களும்
( ஸ்ரீ உ.வே. யக்ஞ வராஹ தாதாசரியார் ஸ்வாமி)

     1. நைநாராசாரியார் ஸ்வாமி:  (குமார வரதாசாரியார்) ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரர். பாரத தேசம் முழுவதும் திக்விஜயம் செய்து பெருமாள் கோவிலில் எழுந்தருளி இருந்து ஸம்ப்ரதாய ப்ரவசநம் செய்துகொண்டு எழுந்தருளி இருந்தார். இவர் அருளிச் செய்த க்ரந்தங்கள்:

     1) அதிகரண சிந்தாமணி (அதிகரண ஸாராவளி வ்யாக்யா) (2) ந்யாஸ விம்சதி வ்யாக்யா (3) விரோதபரிஹார வ்யாக்யா (4) மீமாம்ஸபாதுகா வ்யாக்யா (5) தத்வத்ரய சுலகம் (ஸம்ஸ்க்ருதீகரணம்) (6) ந்யாஸதிலக வாக்யா (7) பிள்ளையந்தாதி (8) தேசிக மங்களா சாஸநாதி (9) ஆஹார நியமச்லோகா (10) ரஹஸ்யத்ரய ஸார ஸங்க்ரஹ: (11) ப்ரபஞ்ச மித்யாத்வ கண்டனம் (12) அபயப்ரதானஸாரம் (13) ரஹஸ்யத்ரயசுலகம் (14) முக்தி விசார: (15) வ்யாவஹாரிக கண்டனம் (16) சிதசிதீச்வர தத்வ நிரூபணம் (17) கண்டநசதுஷ்டயம் (18) தத்வத்ரய நிரூபணம் (19) ரஹஸ்யத்ரய ஸாரார்த்த ஸங்க்ரஹ:

   2. ஸ்ரீநிவாஸாசார்ய ஸ்வாமி: வாதூல மஹாசார்யரின் குமாரர். சோளஸிம்ஹபுரம் தொட்டயாசார்ய ஸ்வாமியின் திருத்தகப்பனார். இவர் அருளிச் செய்த க்ரந்தங்கள் :
(1) தூலிகா (ச்ருதப்ரகாசிகாவ்யாக்யா) அஸம்பூர்ணம் (2) அதிகரண ஸாரார்த்த தீபிகா (3) துருபதேசதிக்கார: (4) முக்த்தி விசார: (5) தர்மக்ஞ ஸமயப்ரமாண ப்ரகாசிகா (6) ஸர்வார்த்த ஸித்தி வ்யாக்யா (தாத்பர்ய ப்ரகாசிகா)

 3. ராமாநுஜாசாரிய ஸ்வாமி: (சோளஸிம்ஹபுரம் தொட்டயாசாரியர் ஸ்வாமி) இந்த ஸ்வாமி சோளஸிம்ஹபுரத்தில் ஸம்ப்ரதாய ப்ரவசநம் செய்துகொண்டு எழுந்தருளி இருந்தார். இவர் க்ரந்தங்கள்:
(1) சண்டமாருதம் (சததூஷணிவ்யாக்யா) (2) பாராசர்ய விஜய: (3) ஸத்வித்யாவிஜய: (4) பரிகர விஜய: (5)  அத்வைதவித்யா விஜய: (6) ப்ரஹ்மவித்யா விஜய: (7) வேதாந்த விஜய: (8) மங்கள தீபிகா (9) அதிகரணார்த்த ஸங்க்ரஹ: (10) அதசப்தார்த்த விசார: (11) ஸதாம்லக்ஷணம் (12) ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ஸங்க்ரஹ: (13) ஸ்ரீபாஷ்யாதிகரணமாலா (14) ஸ்ரீ பாஷ்யோபந்யாஸ (15) விஜயோல்லாஸ: (16) அலங்கார ஸிரோ பூஷணம் (17) சுருதி தாத்பர்ணய நிர்ணய: (18) உத்தரத்விகார்த்த: (19) ஆசார்ய விம்சதி: (ஸ்ரீ தேசிகவிஷயா)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here