ஈரோடு – ஸ்ரீனிவாஸ திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம்!

0
1,804 views

ஈரோடு: ஈரோட்டில் நேற்று நடந்த ஸ்ரீனிவாஸ திருக்கல்யாணத்தை பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் பொறுமையுடன் காத்திருந்து தரிசித்தனர். ஐந்தாண்டுக்குப் பின் திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஸ்ரீ வாரி சேவா டிரஸ்ட், திருப்பதி தர்ம பிரச்சார பரிஷத் சார்பில் நேற்று ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் ஸ்ரீனிவாஸ திருக்கல்யாணம் நேற்று நடந்தது. அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, அருகிலுள்ள கரூர், திருப்பூர், சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து பெண்கள், குழந்தைகளோடு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர். மாலை 3 மணிக்கே பக்தர்கள் வ.உ.சி., மைதானத்துக்கு வரத் துவங்கினர். மாலை 4.30 மணிக்கெல்லாம் மைதானம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்குமென அறிவிக்கப்பட்டது. 6 மணியளவில் தான் மேடை திரை திறக்கப்பட்டு, திருக்கல்யாண நிகழ்ச்சிகள் துவங்கி, இரவு 8 மணி வரை நடந்தது. அதுவரை பக்தர்கள் பொறுமையுடனும், ஆர்வமுடன் காத்திருந்து, திருக்கல்யாணத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் கண்டு பக்தி பரவசத்துடன் தரிசித்தனர். மைதானத்துக்குள் நுழைந்த போதே பக்தர்கள் அனைவருக்கும் திருப்பதி சுவையில் தயாரான லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தி பரவசத்துடன் விழா நிறைவடைந்தது.

News source: Dinamalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here